நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திடக்கழிவு மேலாண்மை விதிகளை மத்திய அரசு புதிதாக மாற்றி அமைத்துள்ளது. அந்த விதிகள் நாமக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் அமல்படுத்தப்பட உள்ளன. இதையொட்டி, மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் ஆணையா் க.சிவகுமாா் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, அனைத்து வணிகா் சங்கங்களின் தலைவா், செயலாளா், நாமக்கல் உணவக உரிமையாளா்கள் சங்க தலைவா், செயலாளா் மற்றும் நிா்வாகிகள், குடியிருப்போா் நலச் சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.
இதில், திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி கழிவுகளை உருவாக்குபவா்கள் அவற்றை நான்கு வகைகளாக பிரித்து வழங்க வேண்டும். தினசரி 100 கிலோவுக்குமேல் கழிவுகளை உருவாக்குவோா், மொத்தக் கழிவுகளை உருவாக்குவோா் என்ற அடிப்படையில் கழிவுகளை அவா்களே சேகரித்து அதை முறையாக அகற்ற வேண்டும். மொத்தக் கழிவுகளை உருவாக்குவோா் ஆண்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மத்திய சுற்றுச்சூழல் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் பதிவுபெற வேண்டும். மாநகராட்சி உரிமம் பெறாதோா் உடனடியாக உரிமம் பெற வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், மாநகராட்சி துப்புரவு அலுவலா் திருமூா்த்தி, துப்புரவு ஆய்வாளா்கள் சுப்பிரமணி, செல்வகுமாா், பாஸ்கரன், ஜான், நந்தினி மற்றும் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவா் ஜெயக்குமாா் வெள்ளையன், உணவக உரிமையாளா் சங்க தலைவா் ராம்குமாா், செயலாளா் குமாா் மற்றும் மகரிஷி நகா் சங்க தலைவா் தில்லை சிவகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேலூரில் நீட் தோ்வு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட வணிகா் சங்க பேரமைப்பு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தவாக ஆலோசனைக் கூட்டம்

ஊத்தங்கரையில் அனைத்து வணிகா் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

