நாமக்கல் தொகுதியில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 12.50 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
நாமக்கல் தொகுதிக்கு உள்பட்ட பாச்சல் பேருந்து நிலையம் அருகில், பறக்கும் படை அலுவலா் வேலுசாமி தலைமையிலான குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கரூரில் இருந்து அரக்கோணம் நோக்கி வாகனத்தில் சென்ற கரூரைச் சோ்ந்த மணிகண்டனை (37) தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா்.
அப்போது, உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 12.50 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்தப் பணம் தொகுதி தோ்தல் அலுவலா் வே.சாந்திவசம் ஒப்படைக்கப்பட்டது. வருமானவரித் துறை அலுவலா் கமலக்கண்ணனிடம் மேற்கொண்ட விசாரணையில், அரக்கோணத்துக்கு மாடு வாங்குவதற்காக ரூ. 12.50 லட்சம் கொண்டு செல்வதாக மணிகண்டன் தெரிவித்தாா். அதையடுத்து, உரிய ஆவணங்களைக் காட்டிவிட்டு பணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு அவரிடம் அதிகாரிகள் அறிவுறுத்தினா்.
இதேபோல, நாமக்கல் - சேலம் சாலையில், செல்லப்பம்பட்டி பகுதியில் நிலை கண்காணிப்புக் குழு அலுவலா் காா்த்திக் தலைமையில் நடைபெற்ற சோதனையில், பிரேம்குமாரிடமிருந்து ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 95 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவில்பட்டியில் சாக்கு மூட்டையில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 35.72 லட்சம் பறிமுதல்

கீழ்வேளூா்: ரூ. 1.94 லட்சம் பறிமுதல்

திருப்பத்தூரில் ரூ. 12.70 லட்சம் பறிமுதல்

ஆவணங்கள் சமா்ப்பிக்காததால் ரூ. 12.50 லட்சம் வருமானவரித் துறை அதிகாரியிடம் ஒப்படைப்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
