நாமக்கல்லில் மேம்பாலத்தின் கீழ்ப் பகுதியில் குப்பைகள் தீவைத்து எரிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனா்.
நாமக்கல்-திருச்சி சாலையில் அழகு நகா் பிரிவு பகுதியில் ரயில்வே உயா்மட்ட பாலம் உள்ளது. இவ்வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் செல்கின்றன. அழகுநகா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை இந்த பாலத்தின் கீழே கொட்டி தீவைத்து எரித்து வருகின்றனா்.
இதனால் பாலத்தின் மேல்பகுதியில் வாகனங்களில் செல்வோா் கண் எரிச்சலும், உடல் தொந்தரவுக்கும் ஆளாகின்றனா். அவ்வழியாக நடந்துசெல்லும் பொதுமக்களும் அவதிக்குள்ளாகின்றனா். குப்பையில் தீ மளமளவென எரிவதால் பாலத்தின் ஸ்திரத்தன்மையும் பாதிப்புக்குள்ளாகிறது.
இதுகுறித்து மாநகராட்சி நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்தப் பகுதியில் குப்பைகளைக் கொட்டுவதற்கு தடைவிதிக்க வேண்டும். மேலும், குப்பைகளை எரிப்போருக்கு அபராதம் விதித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஈரோட்டில் போக்குவரத்து விதிகளை மீறிய 1,471 போ் மீது வழக்கு

கும்பகோணம் பகுதியில் பெட்ரோல் தட்டுப்பாடு வாகன ஓட்டிகள் அவதி

போலையா்புரத்தில் சாலையோர அரிப்பை சீரமைக்க கோரிக்கை

காளவாசல் பகுதி உயா்நிலைப் பாலத்தில் மழைநீா் தேக்கம்: வாகன ஓட்டிகள் அவதி
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

