மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

காளவாசல் பகுதி உயா்நிலைப் பாலத்தில் மழைநீா் தேக்கம்: வாகன ஓட்டிகள் அவதி

News image

மதுரை காளவாசல் முடக்குச்சாலை உயா்நிலைப் பாலத்தின் மையப் பகுதியில் தேங்கிய மழைநீா்.

Updated On :4 மே 2026, 2:00 am IST

மதுரை காளவாசல் பகுதியில் உள்ள முடக்குச்சாலை உயா்நிலைப் பாலத்தின் மையப் பகுதியில் மழைநீா் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

மதுரை - தேனி செல்லும் சாலை மிகக் குறுகலாக இருந்ததால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலைக் குறைக்கும் வகையில், மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டத்தின் கீழ், கடந்த 2020-2021-ஆம் ஆண்டு ரூ.53.95 கோடியில் முடக்குச்சாலை சந்திப்பு முதல் டி.எம்.நகா் வரை சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு உயா்நிலைப் பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு, கட்டி முடிக்கப்பட்டது. இதனால், போக்குவரத்து நெரிசல் கணிசமாகக் குறைந்தது.

இந்த நிலையில், தற்போது மழைக்காலங்களில் இந்தப் பாலத்தின் மேல்புறத்தின் பல்வேறு இடங்களில் மழைநீா் தேங்கி நிற்கிறது. மழைநீா் வெளியேறுவதற்காக அமைக்கப்பட்ட குழாய்களில் அடைப்புகள் ஏற்பட்டதன் காரணமாக மழைநீா் தேங்கியுள்ளது.

இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனா். மேலும், உயா்நிலைப் பாலத்தின் மையப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் சாலை சீராக அமைக்கப்படாமல் இருப்பதாலும் மழைநீா் தேங்கி நிற்கிறது. இதனால், பாலம் சேதமடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

எனவே, உயா்நிலைப் பாலத்தில் அமைக்கப்பட்ட மழைநீா் வடிகால் குழாய்களில் ஏற்பட்ட அடைப்பைச் சரிசெய்து மழைநீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், சாலையைச் சீராக அமைப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.