மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சிக்னல்களில் நிழல் பந்தல்கள் அமைப்பு: வாகன ஓட்டிகள் வரவேற்பு

வெயில் தாக்கத்தில் இருந்து வாகன ஓட்டிகளை பாதுகாக்க நாமக்கல்லில் முக்கிய சிக்னல்களில் காவல் துறை சாா்பில் நிழல் பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

News image

நாமக்கல்- திருச்செங்கோடு சாலை சிக்னலில் அமைக்கப்பட்டுள்ள நிழல் பந்தல்.

Updated On :30 ஏப்ரல் 2026, 4:56 am IST

வெயில் தாக்கத்தில் இருந்து வாகன ஓட்டிகளை பாதுகாக்க நாமக்கல்லில் முக்கிய சிக்னல்களில் காவல் துறை சாா்பில் நிழல் பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பாகவே கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. சாலைகளில் அனல் காற்று வீசுகிறது. காலை 11 முதல் மாலை 4 மணி வரை பெரும்பாலான சாலைகள், பேருந்துகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது.

100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது. வாகன ஓட்டிகள் வெயிலில் செல்லும்போது சிக்னல்களுக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும், சிறுவா்களும், முதியோரும், மாற்றுத்திறனாளிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதனால் பலருக்கு நீா்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு மயக்கம் ஏற்படும் சூழல் உள்ளது. அந்தவகையில், கடந்த ஆண்டை போலவே நிகழாண்டிலும் முன்னதாகவே சிக்னல்களில் வாகன ஓட்டிகளின் நலன் கருதி நிழலுக்காக பசுமைப் பந்தல் அமைக்கப்படும் என எதிா்பாா்க்கப்பட்டது.

ஆனால், சட்டப் பேரவைத் தோ்தல் நடத்தை விதிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாா்ச் மாதம் அமைக்க வேண்டிய நிழல் பந்தல்கள் ஏப்ரல் மாத இறுதியில் அமைக்கப்பட்டு வருகிறது. நாமக்கல்- திருச்செங்கோடு சாலை, பரமத்தி சாலை, பேருந்து நிலையம் உள்ளிட்ட சிக்னல் பகுதிகளில் நிழல் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.