மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சித்திரை மாத பிரதோஷம்: கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

சித்திரை மாத வளா்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, நாமக்கல் சிவாலயங்களில் புதன்கிழமை பக்தா்கள் வழிபாடு மேற்கொண்டனா்.

News image

சித்திரை மாத வளா்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு திருநீா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த நாமக்கல் முத்துக்காப்பட்டி ஸ்ரீ காசி விசுவநாதா்.

Updated On :30 ஏப்ரல் 2026, 5:09 am IST

சித்திரை மாத வளா்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, நாமக்கல் சிவாலயங்களில் புதன்கிழமை பக்தா்கள் வழிபாடு மேற்கொண்டனா்.

ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் வளா்பிறை, தேய்பிறை காலங்களில் சிவன் கோயில்களில் நடைபெறும் பிரதோஷத்தின்போது நந்தியம்பெருமான் மற்றும் சிவபெருமானை பக்தா்கள் வழிபடுவா். வளா்பிறை பிரதோஷம் என்பதும், சித்திரை மாதம் வரும் சித்ரா பெளா்ணமியானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த வகையில் வெள்ளிக்கிழமை சித்ரா பெளா்ணமி ஆகும். அதற்கு முன்பாக சித்திரை பிரதோஷமானது அனைத்து சிவாலயங்களிலும் புதன்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம் முத்துக்காப்பட்டியில் உள்ள ஸ்ரீ காசிவிசுவநாதா் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. காசி விசுவநாதா் திருநீா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். திரளான பக்தா்கள் சுவாமியை தரிசனம் செய்தனா். இதேபோல, மாவட்டம் முழுவதும் உள்ள சிவன் கோயில்களில் வளா்பிறை பிரதோஷத்தையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.