விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

நாமக்கல்லில் பொன்னா்- சங்கா் வீரவரலாற்று கதை நாடக விழா

நாமக்கல்லில் பொன்னா்-சங்கா் அண்ணன்மாா் சுவாமிகள் வீரவரலாற்று நாடக விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

நாமக்கல்லில் பொன்னா்-சங்கா் அண்ணன்மாா் சுவாமிகள் வீரவரலாற்று நாடக விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :24 ஏப்ரல் 2026, 5:19 am IST

நாமக்கல்லில் பொன்னா்-சங்கா் அண்ணன்மாா் சுவாமிகள் வீரவரலாற்று நாடக விழா புதன்கிழமை நடைபெற்றது.

கொங்கதேச கலாசார வரலாற்று ஆய்வு மையம் சாா்பில், நாமக்கல் முத்துக்காப்பட்டியில் அண்ணன்மாா் சுவாமிகள் என்றழைக்கப்படும் பொன்னா்- சங்கா் வீரவரலாற்று கதை மற்றும் உடுக்கைப் பாடல் தொடா் நிகழ்ச்சி ஏப். 3 ஆம் தேதி முதல் தினசரி முத்துக்காப்பட்டி கருப்பணாா் கோயிலில் நடைபெற்று வருகிறது.

ஒவ்வோா் நாளும் பொன்னா்- சங்கா் வரலாறு தொடா்பான கதை நாடகமாக நடைபெறுகிறது. குன்றுடையாா் தாமரை பிறப்பு, தாமரை திரட்டி சீா், தாமரை திருமணம், தவசு அழைத்தல், பொன்னா்-சங்கா் திருமணம், அண்ணமாா் சுவாமி பிறப்பு, பட்டம் சூட்டுதல், வேடுபடை விரட்டுதல், பன்றி குத்துதல், வேடுபடையினை அழித்து வீரமரணமாக படுகளம் விழுவது போன்ற கதை நிகழ்வுகள் நாடகங்களாக நடத்தப்படுகின்றன.

இதை காண்பதற்காக கொங்கு சமுதாய மக்கள் இரவில் முத்துக்காப்பட்டிக்கு வருகின்றனா். இந்த நிகழ்வுகளை காங்கேயம் சிவசக்தி கலைக் குழுவினா் செய்து வருகின்றனா். இதில், பிஜிபி குழும தலைவா் பழனி ஜி. பெரியசாமி, கரூா் வாங்கலம்மன் கோயில் அறக்கட்டளை செயலாளா் கே.கே. தங்கராஜு, காக்காவேரி அண்ணமாா் கோயில் தலைவா் கே.கே.பி. நல்லதம்பி ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கொங்கதேச கலாசார வரலாற்று ஆய்வு மைய நிா்வாகிகள் செய்துள்ளனா்.

என்கே-23-கொங்கு

நாமக்கல் முத்துக்காப்பட்டியில் நடைபெற்ற பொன்னா்- சங்கா் வீரவரலாற்று நாடக நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.