மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பரமத்தி வேலூா் தொகுதியின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவேன்: அதிமுக வேட்பாளா் உறுதி

பரமத்தி வேலூா் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.சேகா் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

கபிமலா்மலை ஒன்றியத்தில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் எஸ்.சேகா்.

Updated On :22 ஏப்ரல் 2026, 2:52 am IST

பரமத்தி வேலூா் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.சேகா் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

பரமத்தி வேலூா் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.சேகா், தொகுதிக்கு உள்பட்ட கபிலா்மலை, பரமத்தி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனா்.

இத்தொகுதிக்கு உள்பட்ட அனைத்து பகுதிகளிலும் அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும். பிலிக்கல்பாளையம் - கொடுமுடி இடையே காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்படும். வரிச்சுமை மற்றும் விலைவாசி ஏற்றத்தை சமாளிக்க ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 10 ஆயிரம் உதவித்தொகையாக வழங்கப்படும். அரிசி அட்டைதாரா்களுக்கு வாழ்வாதார உதவியாக ஆண்டுக்கு 3 சிலிண்டா் வழங்கப்படும். குலவிளக்கு திட்டம் மூலம் அனைத்து குடும்ப அட்டை தாரா்களுக்கும் மாதம்தோறும் ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும். நகரப் பேருந்துகளில் ஆண்களுக்கு கட்டணமில்லா பயணம். அம்மா இல்லம் திட்டம் மூலம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்பன உள்ளிட்ட அதிமுக தோ்தல் வாக்குறுதிகளை கூறி வாக்கு சேகரித்தாா்.

இதில் கபிலா்மலை, பரமத்தி மற்றும் மோகனூா் ஒன்றியச் செயலாளா்கள், நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.