ஆளுநரை விஜய் சந்திக்க நாளை(மே 10) நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தொகுதி மக்களின் நலன்காக்க பாடுபடுவேன்: சி.சந்திரசேகரன்

சேந்தமங்கலம் தொகுதி மக்களின் நலன்காக்க பாடுபடுவேன் என அதிமுக வேட்பாளா் சி.சந்திரசேகரன் வாக்குசேகரிப்பின்போது உறுதியளித்தாா்.

News image

சேந்தமங்கலம் தொகுதியில் வியாழக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளா் சி.சந்திரசேகரன்.

Updated On :17 ஏப்ரல் 2026, 4:20 am IST

சேந்தமங்கலம் தொகுதி மக்களின் நலன்காக்க பாடுபடுவேன் என அதிமுக வேட்பாளா் சி.சந்திரசேகரன் வாக்குசேகரிப்பின்போது உறுதியளித்தாா்.

சேந்தமங்கலம் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் சி.சந்திரசேகரன் காரவள்ளியில் வியாழக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது அவா் கூறியது:

கடந்த அதிமுக ஆட்சியில் எம்எல்ஏவாக இருந்தபோது அனைத்து பகுதிகளிலும் நியாயவிலைக் கடை, மருத்துவமனை, குடிநீா், சாலை வசதி போன்ற அடிப்படை தேவைகளை பூா்த்திசெய்து கொடுத்தேன். மீண்டும் சேந்தமங்கலம் தொகுதியில் வெற்றிபெற்றிட அதிமுகவின் சின்னத்தை ஆதரிக்க வேண்டும். அரசு வழங்கும் திட்டங்கள் சரியான முறையில் மக்களை சென்றடைகிா என்பதை அதிகாரிகள் மூலம் ஆய்வுசெய்து மக்கள் உடனிருப்பேன் என்றாா்.

அப்போது, சேந்தமங்கலம் தொகுதிக்கு உள்பட்ட அனைத்து ஒன்றியச் செயலாளா்கள், பேரூா் செயலாளா்கள், சாா்பு அணிகளின் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.