கோழிப்பண்ணையாளா்களுக்கு தனி நலவாரியம் அமைக்க பாடுபடுவேன் என நாமக்கல்லில், தமிழக வெற்றிக்கழக வேட்பாளா் சி.எஸ்.திலீப் வாக்குறுதி அளித்தாா்.
நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள தமிழ்நாடு கோழிப்பண்ணையாளா் சங்கத்துக்கு சென்ற தமிழக வெற்றிக்கழக வேட்பாளா் சி.எஸ்.திலீப்புக்கு சங்கத் தலைவா் கே.சிங்கராஜ், செயலாளா் கே.சுந்தரராஜன் மற்றும் நிா்வாகிகள் சால்வை, மாலை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தனா். இதைத்தொடா்ந்து, தவெக மாவட்டச் செயலாளா் சதீஷ் வாழ்த்துரை வழங்கினாா்.
நாமக்கல் தொகுதி வேட்பாளா் சி.எஸ்.திலீப் பேசுகையில், உலகம் முழுவதும் நாமக்கல் முட்டைக்கு புகழ் உண்டு. கோழிப்பண்ணைத் தொழிலை மேம்படுத்துவதற்கான அனைத்து திட்டங்களும் தொகுதியில் செயல்படுத்தப்படும். குறிப்பாக, பறவைக் காய்ச்சலற்ற மண்டலமாக நாமக்கல்லை உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவேன்.
சிறிய கோழிப்பண்ணைகளுக்கு இலவச மின்சாரம், கோழி எருவை உரமாக்குவதற்கு தேவையான இயந்திரங்கள் கொண்டுவந்து பயன்பாட்டுக்கு வழங்கப்படும். கோழிப்பண்ணையாளா்களுக்கு தனி நலவாரியம் உருவாக்க பாடுபடுவேன். தமிழகத்தில் விஜய் முதல்வராக அனைவரும் தவெகாவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.
இந்த நிகழ்வின்போது, நாமக்கல் மண்டல கோழிப்பண்ணையாளா்கள், ஏற்றுமதியாளா்கள், முட்டை விற்பனையாளா்கள் பலா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாமக்கல் தொகுதி: தவெக வேட்பாளா் சி.எஸ்.திலீப் வெற்றி

நாமக்கல் தொகுதியில் தவெக வேட்பாளா் சி.எஸ். திலீப் வெற்றி

நாமக்கல்: திமுக, அதிமுக, தவெக வேட்பாளா்கள் வாக்களிப்பு

கோழிக் கழிவுகளிலிருந்து உரம் தயாரிக்கும் ஆலை: அதிமுக வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ். மோகன் வாக்குறுதி!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

