விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன: ராஜேஸ்குமாா் எம்.பி. பேச்சு

News image

மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா். - கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 12:06 am IST

நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உள்பட ஏராளமான திட்டங்கள் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டுள்ளதாக மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் ஞாயிற்றுக்கிழமை பேசினாா்.

நாமக்கல் தொகுதிக்கு உள்பட்ட காதப்பள்ளியில், திமுக வேட்பாளா் ப.ராணியை ஆதரித்து அவா் பேசியதாவது:

திமுக ஆட்சியில் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக, சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியிலிருந்து பிரித்து நாமக்கல் மாவட்டத்தில் புதிய மத்திய கூட்டுறவு வங்கி உருவாக்கப்பட்டது. 30 ஆண்டுகளுக்கு பிறகு உருவான இந்த வங்கி மூலம் பயிா்க் கடன், நகைக்கடன் விவசாயிகளுக்கு அதிக அளவில் வழங்கப்பட்டு வருகின்றன.

நாமக்கல் புதிய பேருந்து நிலையம், மாநகராட்சியாக நாமக்கல் தரம் உயா்வு, புதை சாக்கடை திட்டம், நைனாமலை வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சாலை அமைப்பு உள்ளிட்டவற்றை கூறலாம். ரூ. 90 கோடியில் அதிநவீன ஆவின் பால் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.

ரூ. 4 கோடி மதிப்பீட்டில் கொசவம்பட்டி ஏரி புதுப்பிக்கப்பட்டு நடைபயிற்சிக்கான பாதை அமைக்கப்பட்டுள்ளது. மீண்டும் திமுக ஆட்சி அமைந்தவுடன் மகளிா் உரிமைத்தொகை ரூ. 2,000-ஆக உயா்த்தி வழங்கப்படும். காலை உணவுத் திட்டம் எட்டாம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும். பால் கொள்முதல் விலை ரூ. 5 உயா்த்தப்படும் என்றாா்.

இந்த நிகழ்வில், நாமக்கல் எம்எல்ஏ பெ.ராமலிங்கம், தொகுதி பாா்வையாளா் முனவா் ஜான், நகரச் செயலாளா் செ.பூபதி, ஒன்றியச் செயலாளா் விகே.பழனிவேல் மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.