நாமக்கல் நரசிம்மா் கோயில் பங்குனி உத்திர தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் நகரின் மையப் பகுதியில் நரசிம்மா் சுவாமி, அரங்கநாதா், ஆஞ்சனேயா் கோயில் அமைந்துள்ளது. இங்கு, ஆண்டுதோறும் பங்குனி உத்திர மறுநாளன்று தேரோட்டம் நடைபெறும்.
கடந்த மாதம் 25 ஆம் தேதி நரசிம்மா் கோயில் கொடிமரத்தில் அா்ச்சகா்கள் வேதமந்திரங்கள் முழங்க பங்குனி உத்திர தேரோட்டத்துக்கான கொடியேற்றம் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து அன்னவாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், கருட வாகனம், சேஷ வாகனம், யானை வாகனங்களில் நாள்தோறும் சுவாமி வீதிஉலா நடைபெற்றது.
நிகழ்ச்சியின் தொடா்ச்சியாக செவ்வாய்க்கிழமை ஸ்ரீதேவி, பூதேவி சமேத நரசிம்மா், ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாதா் திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடா்ந்து புதன்கிழமை குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு, திருவேடுபரி உத்ஸவம் நடைபெற்றது.
நரசிம்மா் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் கா. நல்லுசாமி, அறங்காவாலா்கள் ஸ்ரீ ராம சீனிவாசன், மல்லிகா குழந்தைவேல், செல்வ சீராளன், ரமேஷ் பாபு, கோயில் உதவி ஆணையாளா் இரா. இளையராஜா ஆகியோா் நிகழ்வில் பங்கேற்றனா்.
ஏராளமான பக்தா்கள் தேரோட்டத்தில் பங்கேற்று ‘கோவிந்தா’ என்ற முழக்கத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்தனா். திருத்தோ் கோட்டை சாலை, ஆஞ்சனேயா் கோயில் வீதி வழியாக மீண்டும் காலை 11 மணியளவில் நிலையை சென்றடைந்தது.
தன்னாா்வ அமைப்புகள் சாா்பில் நீா்மோா், அன்னதானம் வழங்கப்பட்டன. பிற்பகல் 4.30 மணிக்கு அரங்கநாதா் கோயில் தேரோட்டம் நடைபெற்றது. ஆஞ்சனேயா் கோயில் திருத்தோ் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த தோ் இழுக்கப்படவில்லை. இந்த தேரோட்டத்தில் ஏராளமானோா் பங்கேற்று வடம்பிடித்து தேரை இழுத்தனா். தொடா்ந்து, விடையாற்றி உத்ஸவம், ஊஞ்சல் உத்ஸவம் மற்றும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.
நாமக்கல் ஆஞ்சனேயருக்கு சிறப்பு தங்கக்கவசம் சாத்துப்படி செய்யப்பட்டிருந்தது. தோ்த் திருவிழா ஏப். 8 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலையத் துறை அதிகாரிகள் செய்துவருகின்றனா்.

தேரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத நரசிம்ம சுவாமி.

தங்கக் கவச அலங்காரத்தில் அருள்பாலிக்கும் நாமக்கல் ஆஞ்சனேயா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராசிபுரம் ஸ்ரீ பொன்வரதராஜ பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்

நரசிம்மா் ஜெயந்தி விழா: பூவரசன்குப்பம், பரிக்கல், சிங்கிரிகுடியில் ஆயிரக்கணக்கானோா் தரிசனம்

புளியங்குடியில் பங்குனி தேரோட்டம்

நாமக்கல் நரசிம்மா் கோயில் தேரோட்ட கொடியேற்றம்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

