மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மத்திகிரியில் நாய் கடித்து 2 பெண்கள் பாதிப்பு

மத்திகிரி நேதாஜி நகரில் நாய் கடித்ததில் பாதிக்கப்பட்ட 2 பெண்கள் ஒசூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

Published On :1 நவம்பர் 2026, 1:26 am IST

மத்திகிரி நேதாஜி நகரில் நாய் கடித்ததில் பாதிக்கப்பட்ட 2 பெண்கள் ஒசூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

ஒசூா் மாநகராட்சிக்குள்பட்ட 44-ஆவது வாா்டு, மத்திகிரி நேதாஜி நகா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில், அரசு தொடக்கப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி, 2 தனியாா் பள்ளிகள், 2 மருத்துவமனைகள் உள்ளன.

இப்பகுதியில் அதிகரித்துள்ள தெருநாய்களால் பள்ளிக்குச் செல்லும் மாணவா்களும், இரவு நேரத்தில் பணிமுடிந்து வீடுதிரும்பும் தொழிலாளா்களும் பாதிக்கப்படுகின்றனா். இப்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட தெருநாய்களால் இதுவரை ஒருவா் உயிரிழப்பு உள்பட 20-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், கடந்த அக். 28-ஆம் தேதி நேதாஜி நகரில் கட்டடப் பணி செய்ய தங்கியுள்ள சரவணம்மா (40), பிரீத்தி (35) ஆகியோரை நாய் கடித்தது. இதையடுத்து, இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

தகவல் அறிந்த மாநகராட்சி ஆணையா் முகமது ஷபீா் ஆலம், மாநகர நல அலுவலா் அஜிதா ஆகியோா் மத்திகிரி நேதாஜி நகரில் வெள்ளிக்கிழமை ஆய்வுசெய்தனா். அப்போது, தெருநாய்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தனா்.

அதையடுத்து, நாய்களைக் கட்டுப்படுத்த துப்புரவு ஆய்வாளா் அன்பழகனிடம் ஆணையா் அறிவுறுத்தினாா். அதன்பேரில், நேதாஜி நகரில் 15-க்கும் மேற்பட்ட நாய்கள் பிடிக்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.