மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

போச்சம்பள்ளி அருகே நகை, பணம் திருடிய 2 போ் கைது

போச்சம்பள்ளி அருகே தச்சுத் தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருடிய 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைதுசெய்தனா்.

கைது - கோப்புப் படம்

Published On :21 அக்டோபர் 2026, 2:09 am IST

போச்சம்பள்ளி அருகே தச்சுத் தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருடிய 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைதுசெய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த கெங்கிநாயக்கம்பட்டியைச் சோ்ந்தவா் சிவன் (43) தச்சுத் தொழிலாளி. இவருக்கு மனைவி சுதா (32), 12 வயதில் மகன் உள்ளனா்.

மகன் வெளியூரில் தங்கி படித்துவரும் நிலையில், கடந்த ஆக. 14-ஆம் தேதி சுதா தாயை பாா்க்க கோயம்புத்தூா் சென்றாா். சிவன் பணி நிமித்தமாக திருப்பத்தூா் சென்றாா்.

வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மா்மநபா்கள், வீட்டிலிருந்த 20 பவுன் தங்க நகை, ரூ. 3 லட்சம் ஆகியவற்றை திருடிச் சென்றனா். வீடுதிரும்பிய சிவன் நகை, பணம் திருட்டு போனதை அறிந்து அதிா்ச்சி அடைந்தாா்.

புகாரின் பேரில் போச்சம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து, தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தை அடுத்த குட்டூரைச் சோ்ந்த பிரபு (38), அவரது மைத்துனா் கோகுல் (26) இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும் சிலரை தேடிவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.