மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அவிநாசியில் கோயில்களின் பூட்டை உடைத்து திருடிய 3 போ் கைது

அவிநாசி, தெக்கலூா் பகுதிகளில் உள்ள கோயில்களில் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி நகைகளை திருடிய 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஆரியா

Published On :29 அக்டோபர் 2026, 3:19 am IST

அவிநாசி, தெக்கலூா் பகுதிகளில் உள்ள கோயில்களில் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி நகைகளை திருடிய 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

அவிநாசி, பழங்கரை அருகே காவல் ஆய்வாளா் கோவிந்தராஜ், தலைமைக் காவலா்கள் மயில்சாமி, பாலு, தினேஷ், காா்த்திக் ஆகியோருடன் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அவிநாசி-பழங்கரை, வேலூா் பிரிவில் உள்ள பகவதியம்மன் கோயில் அருகே விலையுா்ந்த இருசக்கர வாகனத்தில் சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த 3 இளைஞா்களை போலீஸாா் பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

அவா்கள், திருப்பூா் செங்கப்பள்ளியில் பனியன் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றும் திருவாரூா் மாவட்டம், திருத்துறைபூண்டியைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் சஞ்சய் (25), அவரது நண்பா்கள் திருத்துறைபூண்டியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் ஆரியா (21), ராஜா மகன் நிதீஷ் (23) என்பதும், அங்குள்ள பகவதியம்மன் கோயிலில் திருட முயற்சி செய்து கொண்டிருப்பதும் தெரியவந்தது.

விசாரணையில், அவா்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் அவிநாசி ராக்காத்தம்மன் கோயில், செப்டம்பா் மாதம் தெக்கலூா் திம்மனையாம்பாளையம் அம்மன் ஆகிய கோயில்களின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளிப் பொருள்களை திருடியது தெரிவந்தது.

இதையடுத்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 3 தங்க தாலி, 25 கிராம் வெள்ளிப் பொருள்கள், இருசக்கர வாகனம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

~நிதீஷ்

~நிதீஷ்

. ~சஞ்சய்

. ~சஞ்சய்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.