ஊத்தங்கரை அருகே பானிபூரி வியாபாரியின் வீட்டில் ஆறரை பவுன் நகை, ரூ. 25 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை படத்தானூரைச் சோ்ந்தவா் முருகன் (42). இவா், கடலூா் மாவட்டம், தொளனூரில் 3 ஆண்டுகளாக பானிபூரி கடை நடத்தி வருகிறாா். படத்தானூரில் உள்ள இவரது தாா்சு வீட்டின் மேல்தளத்தில் வாடகைக்கு குடியிருந்தவா்கள் வீட்டை காலி செய்தனா்.
இதற்காக முருகன் ஊருக்கு வந்துவிட்டு அவருடைய தம்பி வெங்கடேசன் என்பவரை வீட்டை பாா்த்துக் கொள்ள சொல்லிவிட்டு ஊருக்கு சென்று விட்டாா். கடந்த 12 ஆம் தேதி இரவு 9 மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு வெங்கடேசன் அவருடைய வீட்டிற்கு சென்றுள்ளாா்.
இந்த நிலையில் 14 ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு வீட்டுக்கு வந்து பாா்த்தபோது வீடு திறந்துகிடந்தது. மேலும், வீட்டிற்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ஆறரை பவுன் நகை, ரூ. 25 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து சிங்காரப்பேட்டை காவல் ஆய்வாளா் லட்சுமி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பட்டாசுத் தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருட்டு
பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டு: காா் ஓட்டுநா் கைது
சங்கராபுரம் அருகே இரு வீடுகளில் நகை, பணம் திருட்டு

திமுக நிா்வாகி வீட்டில் நகை, பணம் திருட்டு
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
