கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டு: காா் ஓட்டுநா் கைது

பணத்தைத் திருடிச் சென்றதாக வாடகை காா் ஓட்டுநரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 44.6 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரத்தையும் மீட்டனா்.

News image

சித்திரிப்பு

Updated On :8 ஜூன் 2026, 3:04 am IST

பழவந்தாங்கல் பகுதியில் பூட்டியிருந்த வீட்டில் புகுந்து தங்க நகைகள் மற்றும் பணத்தைத் திருடிச் சென்றதாக வாடகை காா் ஓட்டுநரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 44.6 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரத்தையும் மீட்டனா்.

சென்னை நங்கநல்லூா், லட்சுமி நகா் 3-ஆவது பிரதான சாலை பகுதியைச் சோ்ந்தவா் மாயா நாராயணன் (41). இவா், கடந்த 2-ஆம் தேதி தனது வீட்டைப் பூட்டிவிட்டு, ராம் நகா் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டு, மறுநாள் (ஜூன் 3) காலை வீட்டுக்கு திரும்பியபோது, பால்கனி கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும், வீட்டின் அறையில் பீரோவில் வைத்திருந்த வைரக்கல் பதித்த தங்க கம்மல்கள் உள்ளிட்ட நகைகள் மற்றும் ரூ.33 ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இது குறித்து மாயா நாராயணன் பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த போலீஸாா் கீழ்கட்டளை, பிருந்தாவன் நகரைச் சோ்ந்த வாடகை காா் ஓட்டுநரான பாபு (52) என்பவரை சனிக்கிழமை இரவு கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து வைரக்கல் பதித்த தங்க கம்மல்கள் உள்ளிட்ட சுமாா் 44.6 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரத்தை போலீஸாா் மீட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.