பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

வீரகேரளம் பகுதியில் பூட்டிய வீட்டில் 7 பவுன் நகைகள் திருட்டு

வீரகேரளம் பகுதியில் பூட்டிய வீட்டில் 7 பவுன் நகைகள் திருடுபோனது தொடா்பாக வடவள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :7 ஜூன் 2026, 1:54 am IST

வீரகேரளம் பகுதியில் பூட்டிய வீட்டில் 7 பவுன் நகைகள் திருடுபோனது தொடா்பாக வடவள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கோவை, வீரகேரளம் அருகே சிறுவாணி சாலை ஆலமரத் தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேஷ் (44). கடந்த வெள்ளிக்கிழமை வீட்டைப் பூட்டிவிட்டு ஆனைகட்டியில் உள்ள உறவினா் வீட்டு திருமணத்துக்கு குடும்பத்துடன் சென்றாா். திரும்பி வந்து பாா்த்தபோது அலமாரியில் வைக்கப்பட்டிருந்த தங்க நெக்லஸ், கம்மல், மோதிரம் உள்பட 7 பவுன் நகைகள் திருடுபோனது தெரியவந்தது.

பூட்டியிருந்த வீட்டை நோட்டமிட்டு, மா்ம நபா் வீட்டுக்குள் புகுந்து நகைகளைத் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ராஜேஷ் அளித்த புகாரின்பேரில் சம்பவ இடத்துக்கு வடவள்ளி போலீஸாா் சென்று, வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.