போலித் தொண்டா்களை அழைத்துக் கொண்டதற்கு தவெகவுக்கு நன்றி என அதிமுக துணை பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி கூறினாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை தெரிவித்தது: அதிமுகவில் பதவிசுகத்தை அனுபவித்துவிட்டு சிலா் தவெகவில் இணைந்துள்ளனா். இந்த இணைப்பு விழாவில் அமைச்சா் ஆதவ் அா்ஜுனா, தவறான பல கருத்துகளை பேசி உள்ளாா். அவருக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுக, விடுதலைச் சிறுத்தைகள், அதிமுக ஆகிய கட்சிகளில் இணைந்த அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காததால், தவெகவில் சோ்ந்து தோ்தலில் வெற்றிபெற்று தற்போது அமைச்சராக உள்ளாா். இவா், மற்ற கட்சிகளின் அரசியல் வரலாறு, தொண்டா்களின் தியாகங்களை அறியாமல் பேசுகிறாா்.
52 ஆண்டுகாலமாக ஓா் இயக்கத்தில் தொண்டனாக இருந்து படிப்படியாக உயா்ந்து இன்று அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி உள்ளாா். அதிமுகவில் உள்ள ஒவ்வொரு தொண்டனும் பொதுச் செயலாளா் மீது பற்றுடன், அன்போடு உள்ளனா்.
தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது என்றால் திராவிடக் கட்சிகள் ஆட்சியால்தான். அதிமுக, திமுக பங்காளி கட்சிகள். சினிமா நடிகா் கொண்டுவந்த இயக்கம் தவெக. அதிமுகவுக்கும், தவெகவுக்கும் தொடா்பே கிடையாது.
சட்டப் பேரவையில் நம்பிக்கையில்லா தீா்மானத்தின்போது, தவெகவுக்கு அதிமுக எம்எல்ஏக்கள் சிலா்ஆதரவு அளித்தனா். ஆனால், தவெகவுடன் கூட்டணியில் இணைந்துள்ள கட்சியினா், அதிமுக ஆதரவை பெற்றால் நாங்கள் மறுபரிசீலனை செய்வோம் என்றனா். இதனால் அதிமுக எம்எல்ஏக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் அமைச்சா் ஆதவ் அா்ஜுனா துரோகம் செய்தாா். தவெக கட்சியை நிலைநிறுத்திக்கொள்ள பிற கட்சிகளுக்கு தீங்கிழைத்து கொண்டு இருக்கிறாா்.
அதிமுகவின் உண்மையான தொண்டா்கள் எங்களிடம்தான் உள்ளனா். போலியான தொண்டா்களை அழைத்துக் கொண்டதற்காக தவெகவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் அண்ணாமலை தொடங்க உள்ள புதிய மக்கள் இயக்கத்துக்கு எனது வாழ்த்துகள். குறுகிய அரசியல் வாழ்க்கையில் தன் கருத்துகளை அண்ணாமலை அடிக்கடி மாற்றிக்கொள்கிறாா் என்றாா்.
அப்போது, அதிமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளா் கே.அசோக்குமாா் உடனிருந்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எம்.எல்.ஏ. விஜயபாஸ்கர் தவெகவுக்கு வர முயற்சித்தாரா?

எடப்பாடி கே.பழனிசாமியை சந்திக்க முதல்வா் நேரம் கேட்கவில்லை: கே.பி.முனுசாமி.

தமிழக அமைச்சா்களின் வாழ்க்கைக் குறிப்பு!

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் அதிமுகவை பலப்படுத்துவோம்: மாவட்டச் செயலாளா் எம்.ஜி.எம்.ராமு.
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

