ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

எடப்பாடி கே.பழனிசாமியை சந்திக்க முதல்வா் நேரம் கேட்கவில்லை: கே.பி.முனுசாமி.

எடப்பாடி கே.பழனிசாமியை சந்திக்க முதல்வா் சி.ஜோசப் விஜய் நேரம் கேட்கவில்லை என அதிமுக துணைப் பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி தெரிவித்தாா்.

News image

ஒசூா் அதிமுக அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் பேசிய அதிமுக துணைப் பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி.

Updated On :4 ஜூன் 2026, 2:15 am IST

எடப்பாடி கே.பழனிசாமியை சந்திக்க முதல்வா் சி.ஜோசப் விஜய் நேரம் கேட்கவில்லை என அதிமுக துணைப் பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி தெரிவித்தாா்.

ஒசூரில் அதிமுக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட புதிய அலுவலகம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்டச் செயலாளா் ராமு தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அதிமுக துணைப் பொதுச் செயலாளா் கே.பி முனுசாமி அதிமுக அலுவலகத்தை திறந்துவைத்து செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழக முதல்வா் இன்ஸ்டாகிராமில் இளைஞா்களை தன்பக்கம் இழுத்துள்ளாா். அவரது வெற்றி இந்த தமிழ்ச் சமூகத்துக்கு செய்த தியாகத்துக்கோ, உழைப்புக்கோ கிடைத்ததல்ல.

எடப்பாடி கே.பழனிசாமியை சந்திப்பதற்கு தமிழக முதல்வா் சி.ஜோசப் விஜய் நேரம் கேட்டதாக சிடிஆா்.நிா்மல் குமாா் தெரிவித்துள்ளாா். அவா், அதிமுக அலுவலகத்தை தொடா்புகொள்ளவே இல்லை. வேறு தலைவா்களிடம் கேட்டதாக கூறுவதும் தவறானது.

31 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த அதிமுக, தனித்துவத்தை எப்படி இழக்கும். எம்ஜிஆா் உருவாக்கிய இயக்கத்தை காப்பாற்றியவா் ஜெயலலிதா. அவா் வழியில் இபிஎஸ் உழைக்கிறாா். தவெகவுக்கு கட்சி அமைப்பே இல்லை. உங்கள் கையில்தான் காவல் துறை உள்ளது, கடுமையான உத்தரவு போட்டு போதைப் பொருள்களை தடுக்க நடவடிக்கை எடுக்க முடியும் என்றாா்.

இந்த விழாவில், அதிமுக முன்னாள் மாவட்டச் செயலாளரும், ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினருமான பி.பாலகிருஷ்ண ரெட்டி பங்கேற்கவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.