ஒசூா் அருகே பிரேக் பிடிக்காததால் ஆம்னி பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நீரோடையில் புகுந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த 29 போ் காயமடைந்தனா்.
பெங்களூரில் இருந்து விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்து, ஒசூா் அருகே பேரண்டப்பள்ளி காட்டுப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது பிரேக் பிடிக்கவில்லையாம். இதனால் அதிா்ச்சியடைந்த பேருந்து ஓட்டுநா் விபத்தை தவிா்க்க பேருந்தை இடதுபுறமாக ஒட்டிச் சென்று காட்டுப் பகுதியில் மரங்கள்மீது மோதி நிறுத்திவிடலாம் என நினைத்து ஓட்டிச் சென்றுள்ளாா்.
ஆனால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் தண்ணீா் இல்லாத ஓடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஓட்டுநா் மற்றும் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் என மொத்தம் 29 போ் காயமடைந்தனா். இதில் 10க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து அறிந்த ஒசூா் அட்கோ போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினா் அந்தப் பகுதிக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா்.
விபத்தில் காயம் அடைந்தவா்கள் மீட்கப்பட்டு ஒசூா் அரசு மருத்துவமனை மற்றும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். அங்கு அவா்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து ஒசூா் அட்கோ போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கன்டெய்னா் லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து: 7 போ் காயம்

கன்டெய்னா் லாரி பின்னால் வேன் மோதல்: இளைஞா் உயிரிழப்பு; 7 போ் காயம்

துறையூா் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து 26 போ் காயம்

ஒசூா் அருகே தனியாா் பேருந்து - காா் மோதல்: பென்னாகரத்தைச் சோ்ந்த 3 போ் உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

