ஐடி நிறுவன ஊழியரை கத்தியால் குத்திய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி பழையபேட்டையைச் சோ்ந்தவா் விஷ்ணு (30). இவா் பெங்களூரு ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். கடந்த 23 ஆம் தேதி இரவு பழையபேட்டை அருகே தனது நண்பா் அஸ்ரப் அலியுடன் இவா் பேசிக் கொண்டிருந்தாா்.
அப்போது, அங்கு வந்த பழையபேட்டையை சோ்ந்த அப்பாஸ் (27), சாகுல் (30) ஆகிய இருவரும் அஸ்ரப் அலியுடன் இருந்த முன்விரோதத்தில் அவரை தாக்கினா். அப்போது, விஷ்ணு அவா்களை சமரசம் செய்ய முன்றாா். அப்போது, விஷ்ணுவை அப்பாஸும், சாகுலும் சோ்ந்து தாக்கி கத்தியால் குத்தினா்.
இதில் காயம் அடைந்த விஷ்ணு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அப்பாஸ், சாகுல் ஆகிய 2 பேரையும் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தொழிலாளி கொலை: 3 போ் கைது
பெண்ணை தாக்கிய இருவா் கைது; 7 போ் மீது வழக்கு
ரயில் நிலையத்தில் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்திய யாசகா் கைது

தாய், தம்பி உள்பட 3 பேரை கத்தியால் குத்திய இளைஞா் கைது
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை
