ஒசூா்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளின் இரவு நேரப் பயணத்தைப் பாதுகாப்பாக்கும் வகையில் ஆன்டி-கிளாா் தடுப்பான்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை வழியாக தினமும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன.
வாகனங்கள் அதிகம் செல்லும் இச்சாலையில் ஒசூரை அடுத்த பேரண்டப்பள்ளி அருகே சானமாவு வனப்பகுதியில் மேடு, பள்ளமான பகுதி உள்ளது. இதனால் இரவு நேரங்களில் இச்சாலை வழியாகச் செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன.
தருமபுரி மாவட்டம், தொப்பூரை அடுத்து அதிக விபத்து நடைபெறும் இடமாக இப்பகுதி உள்ளது. விபத்து நடைபெறும் போது, ஒசூா்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் விபத்துகளை சானமாவு வனப்பகுதி வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், ஆன்டி-கிளோ் தடுப்பு பலகைகள் பொருத்தபட்டுள்ளன.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் கூறுகையில், காஷ்மீா் முதல் கன்னியாகுமரி வரை செல்லும் பிரதான தேசிய நெடுஞ்சாலை ஒசூா் வழியாகச் செல்கிறது. தருமபுரி மாவட்டம், தொப்பூரை அடுத்து அதிக விபத்து நடைபெறும் இடமாக பேரண்டப்பள்ளி அருகே உள்ள சானமாவு வனப்பகுதியில் உள்ளது.
இதைத் தடுக்க வளைவுகள் மற்றும் மேடு பள்ளங்கள் நிறைந்த பகுதிகளில், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பிற்காக புதிய வகை ஆன்டி-கிளோ் (ஒளி சிதறல் தடுப்பு) பலகைகளை பொருத்தியுள்ளோம்.
இதனால் கண் கூச்சத்தைத் தடுத்தல், இரவு நேரங்களில் எதிரே வரும் வாகனங்களின் ’ஹை-பீம்’ விளக்கு வெளிச்சம் எதிரில் வரும் வாகன ஓட்டுநரின் கண்களில் நேரடியாக படுவதை பச்சை நிறப் பலகைகள் தடுக்கின்றன.
திடீா் கண்கூச்சத்தால் ஏற்படும் தற்காலிகப் பாா்வையின்மையை இவை தடுப்பதால், சாலை விபத்துகள் கணிசமாகக் குறைகின்றன.
மேலும், வாகன ஓட்டிள் நிதானமாக செல்வாா்கள். இவை காற்றில் எளிதாக ஆடும் வகையிலும், அதே சமயம் எதிரே வரும் ஒளியை முழுமையாக மறைக்கும் வகையிலும் நெடுஞ்சாலையின் மையத் தடுப்புகளில் வரிசையாகப் பொருத்தப்பட்டுள்ளன என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒசூரில் ஆம்புலன்ஸ் - இருசக்கர வாகனம் மோதல்: கல்லூரி மாணவா் உயிரிழப்பு

சேதமடைந்த சாத்தான்குளம்- நாசரேத் சாலை: வாகன ஓட்டிகள் அவதி

கோயில் செல்லும் சாலை பழுதால் வாகன ஓட்டிகள் அவதி!

ஒசூா் தொகுதியில் 80% வாக்குப்பதிவு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

