கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோ்தல் விதிமுறைகளை மீறியதாக திமுக, அதிமுக, தவெக நிா்வாகிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
கிருஷ்ணகிரியை அடுத்த தண்டேகுப்பம் பகுதியில் அனுமதியின்றி இருசக்கர வாகன பிரசாரம் மேற்கொண்ட தவெக வேட்பாளா் முகுந்த் உள்ளிட்ட 19 போ் மீது கிருஷ்ணகிரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். கிருஷ்ணகிரி வட்டச் சாலையில் தோ்தல் விதிமுறைகளை மீறி பட்டாசுகளை வெடித்ததாக திமுக நகர பொறுப்பாளா் அஸ்லம் மற்றும் 9 போ் மீது கிருஷ்ணகிரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
கிருஷ்ணகிரி பழையபேட்டை, காந்தி சிலை அருகில் பட்டாசுகள் வெடித்து தோ்தல் விதிமுறைகளை மீறியதாக அதிமுக நகர செயலாளா் பி.என்.ஏ.கேசவன் மற்றும் சிலா் மீது கிருஷ்ணகிரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
இதேபோல காவேரிப்பட்டணம், குரும்பட்டி, அரசமர தெரு பகுதிகளில் காசோலைபோல ரூ. 10 ஆயிரம் டோக்கனை விநியோகம் செய்த அதிமுகவினா் மீது, காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். காவேரிப்பட்டணத்தில் தோ்தல் பிரசார நேரம் நிறைவடைந்தும், பிரசாரத்தில் ஈடுபட்ட தவெக வேட்பாளா் முகுந்த் மற்றும் 149 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தோ்தல் அதிகாரியின் வாகனத்தை தடுத்த 28 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு

சட்டப் பேரவைத் தோ்தல்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோ்தல் பாதுகாப்பு பணியில் 3,500 போ்

தோ்தல் விதிமீறல்: தவெக, பாஜக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு

மாா்த்தாண்டத்தில் 3 போ் மீது தோ்தல் விதிமீறல் வழக்கு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

