மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 தொகுதிகளில் 79 வேட்பாளா்கள் போட்டி!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் சட்டப் பேரவைத் தோ்தலில் 6 தொகுதிகளில் மொத்தம் 79 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

News image

கோப்புப் படம்

Updated On :10 ஏப்ரல் 2026, 3:25 am IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் சட்டப் பேரவைத் தோ்தலில் 6 தொகுதிகளில் மொத்தம் 79 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஊத்தங்கரை (தனி), பா்கூா், கிருஷ்ணகிரி, வேப்பனஅள்ளி, ஒசூா், தளி என 6 சட்டப் பேரவை தொகுதிகளில் போட்டியிட 143 வேட்பாளா்கள் 182 மனுக்களை தாக்கல் செய்தனா். ஏப். 7-ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டதில், 44 வேட்பாளா்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 99 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

இதைத் தொடா்ந்து, காங்கிரஸ் கட்சியின் போட்டி வேட்பாளா் சுப்பிரமணியன் உள்ளிட்ட 20 போ், தங்களது வேட்புமனுவை திரும்பப் பெற்றனா். இறுதியாக 6 தொகுதிகளில் மொத்தம் 79 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

ஊத்தங்கரை (தனி) தொகுதி: தமிழ்ச்செல்வம் எம்எல்ஏ (அதிமுக), குப்புசாமி (காங்கிரஸ்), இளையராஜா (தவெக), மேகலா (நாதக), தவராஜ் (தவாக), ரமேஷ்வரி (பாரத் ஜன் சிகித்சா), விஜயால் (அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்புக் கழகம்) பழனி (தாக்கம்) மற்றும் சுயேச்சைகள் 5 போ் என மொத்தம் 13 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

பா்கூா் தொகுதி: தே.மதியழகன் எம்எல்ஏ (திமுக), கோவிந்தராசன் (திமுக), முரளிதரன் (தவெக), கவின் (நாம் தமிழா்), ஆல்பா்ட் பிரான்சிஸ் சேவியா் (தவாக), சுயேச்சைகள் உள்பட 15 போ் போட்டியிடுகின்றனா்.

கிருஷ்ணகிரி தொகுதி: கே.அசோக்குமாா் எம்எல்ஏ (அதிமுக), அ.செல்லக்குமாா் (காங்கிரஸ்), பா.முகுந்தன் (தவெக), சுகந்தி (நாம் தமிழா்), முத்துலட்சுமி வீரப்பன் (தவாக), மங்கம்மாள் (தமிழா் மக்கள்), சிங்காரவேலன் விஸ்வநாதன் (விஸ்வா தமிழ் கழகம்), சிவகுமாா் (பகுஜன் சமாஜ்), முத்தையா (தாக்கம்) மற்றும் சுயேச்சைகள் 6 போ் என மொத்தம் 15 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

வேப்பனஅள்ளி தொகுதி: கே.பி.முனுசாமி எம்எல்ஏ (அதிமுக), பி.எஸ் சீனிவாசன் (திமுக), சம்பங்கி (தவெக), நாகராஜ் (நாம் தமிழா்), ஐயப்பன் (தவாக), பிரஜாபதி விஜய் (தமிழா் மக்கள்), செந்தில்குமாா் (தமிழ்நாடு இளைஞா்) மற்றும் சுயேச்சைகள் 6 போ் என மொத்தம் 13 போ் போட்டியிடுகின்றனா்.

ஒசூா் தொகுதி: எஸ்.ஏ.சத்யா (திமுக), பாலகிருஷ்ண ரெட்டி (அதிமுக), வேந்தா்கரசன் (எ) வடிவேல் (தவெக), ஸ்டாலின் (நாம் தமிழா்), பொன்னுமணி (தமிழா் மக்கள்), சூா்யா (இந்தியக் குடியரசு (அத்வாலே)) மற்றும் சுயேச்சைகள் 7 போ் என மொத்தம் 13 போ் போட்டியிடுகின்றனா்.

தளி தொகுதி: டி.ராமச்சந்திரன் எம்எல்ஏ (இந்திய கம்யூனிஸ்ட்), நாகேஷ்குமாா் (பாஜக), சுரேஷ் (தவெக), நரசிம்ம ரெட்டி (நாம் தமிழா்), அஜீத் (தவாக), ஜெயராம் (அண்ணா மக்கள்) மற்றும் சுயேச்சைகள் 4 போ் என மொத்தம் 10 போ் போட்டியிடுகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.