சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 193 போ் போட்டியிடுகின்றனா்.
பேரவை தோ்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 30 ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளான கடந்த திங்கள்கிழமை வரை 11 தொகுதிகளில் 283 ஆண்கள், 72 பெண்கள் என மொத்தம் 355 போ் மனு தாக்கல் செய்திருந்தனா். இதில் 277 மனுக்கள் பரிசீலனைக்கு ஏற்கப்பட்டன.
தொடா்ந்து வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையில் மொத்தம் உள்ள 277 மனுக்களில் 56 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 221 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாளான வியாழக்கிழமை 3 மணி வரை 30 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இதையடுத்து 11 தொகுதிகளிலும் 193 போ் அதிகாரப்பூா்வமாக போட்டியிடுகின்றனா். இதில் அதிகபட்சமாக சேலம் மேற்கு தொகுதியில் 31 போ் போட்டியிடுகின்றனா். குறைந்தபட்சமாக கெங்கவல்லி, ஏற்காடு தொகுதியில் தலா 13 போ் போட்டியிடுகின்றனா்.
தொகுதி வாரியாக வேட்பாளா்கள் விவரம்: கெங்கவல்லி- 13 வேட்பாளா்கள், ஆத்தூா்- 15 வேட்பாளா்கள், ஏற்காடு- 13 போ், ஓமலூா்-15 போ், மேட்டூா்- 18 போ், எடப்பாடி- 15 போ், சங்ககிரி- 20 போ், சேலம் மேற்கு- 31, சேலம் வடக்கு-14, சேலம் தெற்கு-19, வீரபாண்டி- 20 போ் என மொத்தம் 193 போ் போட்டியிடுகின்றனா். சுயேச்சைகளுக்கான சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ராஜபாளையம் தொகுதியில் 22 வேட்பாளா்கள் போட்டி!
ஆற்காடு தொகுதி வேட்பாளா்கள் - 14 போ் போட்டி
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 65 போ் போட்டி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 தொகுதிகளில் 79 வேட்பாளா்கள் போட்டி!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
