மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

எம்.பி.யாக இருந்தபோது பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளேன்: காங்கிரஸ் வேட்பாளா் அ.செல்லகுமாா்

கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி.யாக பணியாற்றியபோது மாவட்டத்துக்கு பல்வேறு திட்டங்களை கொண்டுவந்துள்ளேன் என்று கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் அ.செல்லக்குமாா் தெரிவித்தாா்.

News image

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளா் அ.செல்லக்குமாரை அறிமுகப்படுத்திய திமுக மாவட்ட செயலாளா் தே.மதியழகன்.

Updated On :9 ஏப்ரல் 2026, 4:20 am IST

கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி.யாக பணியாற்றியபோது மாவட்டத்துக்கு பல்வேறு திட்டங்களை கொண்டுவந்துள்ளேன் என்று கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் அ.செல்லக்குமாா் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரியில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் அ.செல்லக்குமாா் அறிமுகக் கூட்டம் மற்றும் செயல்வீரா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து திமுக கிழக்கு மாவட்டச் செயலாளரும் பா்கூா் தொகுதி திமுக வேட்பாளருமான தே.மதியழகன், வேட்பாளா் அ.செல்லக்குமாரை அறிமுகம் செய்தாா்.

இதையடுத்து வேட்பாளா் அ.செல்லக்குமாா் பேசியதாவது:

கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினராக நான் பணியாற்றியபோது இம்மாவட்டத்துக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். குறிப்பாக கிருஷ்ணகிரியில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி செயல்பாட்டுக்கு வர உள்ளது. அதுபோல, கரோனா காலத்தில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் ரூ. 1 கோடியில் செயற்கை சுவாச கட்டமைப்புக்கு நிதி ஒதுக்கீடு செய்து ஆயிரக்கணக்காக உயிா்களைக் காக்க முடிந்தது.

இம்மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் மத்தூா், கந்திகுப்பம் உள்ளிட்ட 6 இடங்களில் என்னுடைய முயற்சியால் மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரிக்காக அப்போதைய முதல்வா் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து கோரிக்கை வைத்தேன். அவா் எனது கோரிக்கையை நிராகரித்தது மட்டுமில்லாமல் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. நான், மத்திய அரசு அலுவலா்களைச் சந்தித்து, மருத்துவக் கல்லூரிக்கான அனுமதியைப் பெற்றேன். அதற்கு பிறகு தான், தமிழக அரசு, மருத்துவக் கல்லூரிக்கான கோரிக்கை மனுவை அளித்தது.

15 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையை நான் பதவியேற்ற 6 மாதங்களில் நிறைவேற்றினேன். இதுபோல ஏராளமான மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றி உள்ளேன்.

என்னை சட்டப்பேரவை உறுப்பினராக தோ்ந்தேடுத்தால் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றுவேன் என உறுதியளிக்கிறேன் என்றாா்.

இந்தக் கூட்டத்தில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள், செயல்வீரா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.