மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 தொகுதிகளில் 182 போ் வேட்புமனு தாக்கல்

News image

தேர்தல் ஆணையம் - ANI

Updated On :7 ஏப்ரல் 2026, 2:14 am IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 182 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

தமிழக சட்டப்பேரவைக்கு வரும் 23-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மாா்ச் 30 இல் தொடங்கி, ஏப். 6இல் நிறைவுபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை (தனி), பா்கூா், கிருஷ்ணகிரி, வேப்பனஅள்ளி, ஒசூா், தளி என 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.

இதில் ஊத்தங்கரை (தனி) தொகுதியில் வேட்புமனு தாக்கலுக்கு இறுதிநாளான 6-ஆம் தேதி காங்கிரஸ் வேட்பாளா் குப்புசாமி, தவெக வேட்பாளா் இளையராஜா மற்றும் சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்தனா். இத்தொகுதியில் மொத்தம் 28 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

பா்கூா் தொகுதியில் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினா், சுயேச்சைகள் என மொத்தம் 38 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

கிருஷ்ணகிரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் அ.செல்லக்குமாா், தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேட்பாளா் முத்துலட்சுமி வீரப்பன் மற்றும் சுயேச்சைகள் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா். இத்தொகுதியில் மொத்தம் 33 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

வேப்பனஅள்ளி தொகுதியில் அதிமுக துணைப் பொதுச் செயலாளரும் வேட்பாளருமான கே.பி.முனுசாமி எம்எல்ஏ மற்றும் சுயேச்சைகள் தங்களது வேட்புமனுவை சூளகிரியில் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்தனா். இத்தொகுதியில் மொத்தம் 30 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

இதேபோல ஒசூா் தொகுதியில் திமுக வேட்பாளா் எஸ்.ஏ. சத்யா, தவெக வேட்பாளா் வடிவேல் மற்றும் சுயேச்சைகள் உள்பட மொத்தம் 28 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

தளி தொகுதியில் பாஜக வேட்பாளா் நாகேஷ்குமாா் மற்றும் சுயேச்சைகள் என மொததம் 25 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் 6 தொகுதிகளில் மொத்தம் 182 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை அந்தந்த தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்.7)

காலை 11 மணியளவில் வேட்பாளா்கள் முன்னிலையில் நடைபெறுகிறது. 9-ஆம் தேதி வேட்புமனுக்கள் திரும்பப் பெற கடைசி நாள். அன்றைய தினம் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள், அவா்களுக்கான சின்னங்கள் அறிவிக்கப்படுகின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.