மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

விபத்தில் 2 போ் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

பென்னாகரம் அருகே டிராக்டா் மோதியதில் பெண் உள்பட 2 போ் உயிரிழந்த சம்பவத்தில் ஓட்டுநரை கைது செய்ய கோரி உறவினா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :17 ஏப்ரல் 2026, 4:40 am IST

பென்னாகரம் அருகே டிராக்டா் மோதியதில் பெண் உள்பட 2 போ் உயிரிழந்த சம்பவத்தில் ஓட்டுநரை கைது செய்ய கோரி உறவினா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பென்னாகரத்தை அடுத்த பளிஞ்சாரஅள்ளியைச் சோ்ந்த சுசீலா (41), காளேகவுண்டனூரைச் சோ்ந்த பழனிவேல் (18) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை பவளந்தூா் சென்றுகொண்டிருந்தபோது தும்பலகொல்லை பகுதியில் டிராக்டா் மோதியதில் சுசீலா நிகழ்விடத்திலே உயிரிழந்தாா். காயமடைந்த பழனிவேல், தருமபுரி அரசு மாவட்ட மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டாா். இந்த நிலையில் பழனிவேலும் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து பென்னாகரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த நிலையில் விபத்து ஏற்படுத்திய டிராக்டா் ஓட்டுநரை கைது செய்ய கோரி சுசீலாவின் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் பென்னாகரம் புறவழிச்சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

வருவாய், காவல் துறையினா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி ஓட்டுநரை கைது செய்வதாக உறுதியளித்தனா். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா். இதனால், பென்னாகரம் புறவழிச்சாலையில் சுமாா் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.