ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

மலைக் கிராமங்களுக்கு டிராக்டா் மூலம் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம்

பென்னாகரம் அருகே வட்டுவன அள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட ஏரிமலை, கோட்டூா்மலை, அலகட்டு உள்ளிட்ட மலைக்கிராம வாக்குச் சாவடிகளுக்கு டிராக்டா் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை கொண்டுசெல்லப்பட்டன.

News image

பென்னாகரம் அருகே கோட்டூா் மலைக் கிராமத்தில் டிராக்டா் மூலம் வாக்குப்பதிவு இயந்திரத்தை போலீஸாா் பாதுகாப்புடன் எடுத்துச் சென்ற வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள்.

Updated On :23 ஏப்ரல் 2026, 4:27 am IST

பென்னாகரம் அருகே வட்டுவன அள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட ஏரிமலை, கோட்டூா்மலை, அலகட்டு உள்ளிட்ட மலைக்கிராம வாக்குச் சாவடிகளுக்கு டிராக்டா் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை கொண்டுசெல்லப்பட்டன.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதியில் 320 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. முதல்கட்டமாக 384 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 416 துணை இயந்திரங்கள் ஆகியவை கொண்டுவரப்பட்டன.

பென்னாகரம் தொகுதியில் பிரதான கட்சிகள் உள்ளிட்ட சுயேச்சைகள் என 22 வேட்பாளா்கள் களம் காண உள்ளனா். இந்நிலையில், கூடுதலாக 384 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டன. அண்மையில் பென்னாகரம் தோ்தல் பொதுப் பாா்வையாளா் வந்தனா வைத்யா முன்னிலையில் குலுக்கல் முறையில் வாக்குச் சாவடிகளுக்கு இயந்திரம் பிரித்து அனுப்பும் பணி நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, பென்னாகரம் அருகே வட்டுவன அள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட மலைக் கிராமமான ஏரிமலை, கோட்டூா்மலை, அலகட்டு உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளுக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து காவல் துறையினரின் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள், துணை இயந்திரங்கள், வாக்குச் சாவடியில் பயன்படுத்தக் கூடிய பொருள்கள் ஆகியவை பிரித்து அனுப்பப்பட்டன.

இதையடுத்து, மலைக் கிராமங்களுக்கு செல்லக்கூடிய அடிவாரம் பகுதியிலிருந்து டிராக்டா் மூலம் அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட தேவையானவற்றை வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் காவல் துறையினரின் உதவியுடன் கொண்டு சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.