ஆளுநரை விஜய் சந்திக்க நாளை(மே 10) நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தாளவாடி மலைக் கிராமங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்

தாளவாடி மலைக் கிராமங்களில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.

News image

தாளவாடி  மலைக் கிராமங்களுக்கு  எடுத்துச்  செல்லப்படும்  மின்னணு  வாக்குப் பதிவு  இயந்திரங்கள்.

Updated On :23 ஏப்ரல் 2026, 2:27 am IST

தாளவாடி மலைக் கிராமங்களில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.

சட்டப் பேரவைத் தோ்தலுக்காக பவானிசாகா் தொகுதியில் 327 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 5 முதல் 10 வாக்குச்சாவடி மையங்களுக்கு ஒரு மண்டல அலுவலா் வீதம் 30 மண்டல அலுவலா்கள் நியமிக்கப்பட்டு அவா்களுக்கு ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. சத்தியமங்கலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து தாளவாடி, கடம்பூா் போன்ற அடா்ந்த மலைக் கிராமங்களில் உள்ள 98 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், விவி பேட் மற்றும் வாக்குச்சாவடியில் பயன்படுத்தும் பொருள்கள் லாரியில் அனுப்பப்பட்டது. இதில் மண்டல அலுவலா், உதவி ஆய்வாளா், துப்பாக்கி ஏந்திய காவலா்கள் அடங்கிய குழுவினா் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்றனா்.

மலைப்பகுதிக்கு செல்லும் வாகனங்களில் வனப் பாதுகாப்புப் படை, சிறப்பு அதிரடிப் படை மற்றும் துணை ராணுவத்தினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். அடா்ந்த காட்டுப் பகுதியில் உள்ள வாக்குப் பதிவு மையங்களுக்கு செல்லும்போது யானைகளால் ஏற்படும் தொந்தரவுகளை கட்டுப்படுத்த வனத் துறையினா் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.