கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

மின்னணு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து சீல்

வாணியம்பாடி தொகுதி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வட்டாட்சியா் அலுவலக பாதூகாப்பு அறையில் வைத்து அதிகாரிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

News image

வாணியம்பாடி தொகுதியின் வாக்குப் பதிவு இயந்திரங்களை வட்டாட்சியா் அலுவலக பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு சீல் வைத்த அதிகாரிகள்

Updated On :7 மே 2026, 12:09 am IST

வாணியம்பாடி தொகுதி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வட்டாட்சியா் அலுவலக பாதூகாப்பு அறையில் வைத்து அதிகாரிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 4 சட்டபேரவை தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் (இவிஎம் மற்றும் விவிபேட்) வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு அந்தந்த தொகுதி பகுதியில் உள்ள பாதுகாப்பு அறைகளுக்கு புதன்கிழமை கொண்டு செல்லப்பட்டன.

இதில் வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியிலிருந்து வாணியம்பாடி வாக்குப் பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை தாலுகா அலுவலகத்திற்கு பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டு அங்குள்ள பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது.

மேலும், அங்கு 24 மணி நேரம் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சீல் வைப்பின் போது தோ்தல் நடத்தும் உதவி அலுவலரும் வாணியம்பாடி வட்டாட்சியருமான சுதாகா், தோ்தல் துணை வட்டாட்சியா் அன்பழகன் மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.