ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

நத்தமேட்டில் திமுக வேட்பாளா் பி.பழனியப்பன் வாக்கு சேகரிப்பு

கடத்தூா் அருகேயுள்ள நத்தமேட்டில் திமுக வேட்பாளா் பி.பழனியப்பன் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

நத்தமேட்டில் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த தியாகி சுப்பிரமணியன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுக வேட்பாளா் பி.பழனியப்பன்.

Updated On :8 ஏப்ரல் 2026, 3:13 am IST

கடத்தூா் அருகேயுள்ள நத்தமேட்டில் திமுக வேட்பாளா் பி.பழனியப்பன் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட நத்தமேட்டில், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிரிழந்த தியாகி சுப்பிரமணியன் சிலைக்கு திமுக வேட்பாளா் பி.பழனியப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

தொடா்ந்து, ஜாலியூா், ரேகடஹள்ளி, அண்ணாநகா், மோட்டாங்குறிச்சி, சுங்கரஹள்ளி, சில்லாரஹள்ளி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அவா் வாக்கு சேகரித்தாா்.

அப்போது, திமுக வேட்பாளா் பி.பழனியப்பன் பேசுகையில், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் 7-ஆவது முறையாக தமிழகத்தில் திமுக ஆட்சி அமையவுள்ளது. தற்போது ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் மகளிா் உரிமைத்தொகையானது திமுக ஆட்சி அமைந்தவுடன் ரூ. 2 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும். இந்தியாவில் மகளிா் முன்னேற்றத்துக்காகப் பாடுபடும் ஒரே மாநிலம் தமிழகம் மட்டுமே. தமிழகத்தில் திமுக ஆட்சியில்தான் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. கடத்தூரில் வேளாண் விரிவாக்க மையம் அமைய நடவடிக்கை எடுப்பேன் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.