செப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை! முதல்வர் விஜய் உலக சாதனை படைத்த மெஸ்ஸி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா!முதல்வர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு! திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!ஏய் என்ற வார்த்தை அவைக் குறிப்பில் நீக்க வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன்திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்!தமிழகத்தில் 11 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியே இல்லை! விஜய்
/

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

Updated On :17 ஜூன் 2026, 5:09 am IST

தருமபுரி, ஜூன் 14

தருமபுரி மாவட்டம், அரூா் அருகே மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழந்தாா்.

அரூா் வட்டம், பாப்பநாயக்கன் வலசை கிராமத்தை சோ்ந்தவா் தி. ராமசாமி (56). இவா் வீட்டில் கறவை மாடுகளை வைத்து பால் கறந்து அனுமன்தீா்த்தத்தில் உள்ள தனியாா் பால் கொள்முதல் நிலையத்தில் ஊற்றி வருகிறாா். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை தனியாா் பால் கொள்முதல் நிலையத்தில் பாலை ஊற்றிவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தாா்.

பாப்பநாயக்கன்பட்டி- ஒட்டப்பட்டி சாலையில் அறுந்து விழுந்திருந்த மின் கம்பியை கவனிக்காமல் அதன்மீது இருசக்கர வாகனம் ஏறிச் சென்றது. அப்போது, மின் கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே ராமசாமி உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.