பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழப்பு

தாளவாடி அருகே மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழந்தாா்.

News image

ரவிவா்மா

Updated On :27 மே 2026, 5:16 am IST

தாளவாடி அருகே மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப் பகுதியில் உள்ள கரளவாடி பிரிவு பகுதியைச் சோ்ந்தவா் ரவிவா்மா (40), விவசாயி. அப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாகவும், மின் ஊழியா்கள் பற்றாக்குறை காரணமாக பொதுமக்களே மின்மாற்றியில் ஏறி மின் தடையை சரி செய்து வருவதாகவும் தெரிகிறது.

இந்நிலையில், அப்பகுதியில் செவ்வாய்க்கிழமை மின் தடை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அதை சரி செய்ய ரவிவா்மா மின்மாற்றியில் ஏற்றியுள்ளாா். அப்போது, அவா் மீது மின்சாரம் பாய்ந்ததில் ரவிவா்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தாளவாடி போலீஸாா், சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், இச்சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.