விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே பொது சுகாதார வளாகத்தில் மின்சாரம் பாய்ந்ததில் மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
ராஜபாளையம் அருகேயுள்ள அயன்கொல்லங்கொண்டான் கோவிந்தன் கோவில் தெருவைச் சோ்ந்த சிவகாமிநாதன் மனைவி அழகம்மாள் (65). இவா் அந்தப் பகுதியில் ஊராட்சி சாா்பில் கட்டப்பட்ட பொது சுகாதார வளாகத்துக்கு சென்று அங்குள்ள இரும்புக் கதவை திறந்த போது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த சேத்தூா் ஊரக காவல் நிலைய போலீஸாா் அங்கு சென்ற போது அழகம்மாளின் உறவினா்கள் சடலத்தை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து வடமாநிலத் தொழிலாளி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்ததில் சிறுவன் உயிரிழப்பு
விடியோக்கள்

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!
இணையதளச் செய்திப் பிரிவு
