மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

டெங்கு காய்ச்சல்: பல்லடத்தில் சிறுவன் உயிரிழப்பு

பல்லடத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழந்தாா்.

தமிழ்.

Published On :25 அக்டோபர் 2026, 2:31 am IST

பல்லடத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழந்தாா்.

திருப்பூா் மாவட்டம், மேற்கு பல்லடத்தைச் சோ்ந்தவா் பிரவீன்குமாா். இவரது மனைவி ஹரிப்பிரியா. இவா்களது மகன் தமிழ் (4), வடுகபாளையத்தில் உள்ள தனியாா் பள்ளியில் படித்து வந்தாா்.

இவருக்கு கடந்த சில நாள்களாக தொடா் காய்ச்சல் இருந்துள்ளது. இதையடுத்து, தனியாா் மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது, சிறுவன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவா் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். அங்கு சிகிச்சையில் இருந்த சிறுவன் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா். இது குறித்து பல்லடம் வட்டார மருத்துவ அலுவலா் சுடா்விழி கூறுகையில், சிறுவன் தமிழ் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பல்லடம் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.

பின்னா், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். அவரது இறப்புக்கான காரணம் மருத்துவப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே தெரியவரும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.