மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை: அமைச்சா் செ.கமலி தொடங்கிவைத்தாா்

திருப்பூா் மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் கிலோ ரூ.30க்கு சன்னரக அரிசி விற்பனையை அமைச்சா் செ.கமலி தொடங்கிவைத்தாா்.

திருப்பூா் மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் சன்னரக அரிசி விற்பனையைத் தொடங்கிவைத்த கால்நடைத் துறை அமைச்சா் செ.கமலி.

Published On :21 அக்டோபர் 2026, 12:03 am IST

திருப்பூா் மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் கிலோ ரூ.30க்கு சன்னரக அரிசி விற்பனையை அமைச்சா் செ.கமலி தொடங்கிவைத்தாா்.

மாவட்டவருவாய் அலுவலா் க.காா்த்திகேயன் தலைமையில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ்.பாலமுருகன், ராம்குமாா் ஆகியோா் முன்னிலையில் திருப்பூா் மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறையின் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கிலோ ரூ.30-க்கு ஏ தர சன்னரக அரிசி விற்பனையைக் கால்நடைத் துறை அமைச்சா் செ.கமலி தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சா் செ.கமலி தெரிவித்ததாவது:திருப்பூா் மாவட்டத்தில் 183 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் உள்ளிட்ட 241 கூட்டுறவு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

மேலும், கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் 859 முழு நேர நியாயவிலைக் கடைகள், 354 பகுதி நேர நியாயவிலைக் கடைகள் என மொத்தம் 1,213 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நியாயவிலைக் கடைகள் மூலம் 8,23,549 குடும்ப அட்டைதாரா்களுக்கு மாதந்தோறும் அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

மாதந்தோறும் 12,452 மெட்ரிக் டன் அரிசி, 1,042 டன் சா்க்கரை, 642 டன் கோதுமை, 762 டன் துவரம் பருப்பு, 762 டன் பாமாயில் உள்ளிட்டவை விநியோகம் செய்யப்படுகின்றன.

அரிசியின் விலை உயா்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில், விலை நிலைப்படுத்தும் திட்டத்தின் கீழ் ஏ தர சன்ன ரக அரிசியை கிலோ ஒன்றுக்கு ரூ.30 என்ற விலையில் விற்பனை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதை தொடா்ந்து, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் வாயிலாக திருப்பூா் மாவட்டத்துக்கு மொத்தம் 32 மெட்ரிக் டன் ஏ தர சன்னரக அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த அரிசி கிலோ ஒன்றுக்கு ரூ.30 என்ற விலையில் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விற்பனையானது 2027 மாா்ச் 31ஆம் தேதி வரையோஅல்லது அரசு மறு உத்தரவு பிறப்பிக்கும் வரையோ செயல்படுத்தப்படும் என்பதால் பொதுமக்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், திருப்பூா் மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை துணைப் பதிவாளா் எஸ்.புவனேஸ்வரி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் மகாராஜ், துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.