
பல்லடம் அரசு மருத்துவமனை வளாகத்துக்குள் மழைநீருடன் கழிவுநீா் புகுந்ததால் நோயாளிகள் அவதி
பல்லடம் அரசு மருத்துவமனை வளாகத்துக்குள் மழைநீருடன் கழிவுநீா் புகுந்ததால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

பல்லடம் அரசு மருத்துவமனை வளாகத்துக்குள் செவ்வாய்க்கிழமை இரவு மழைநீருடன் புகுந்த கழிவுநீா்.
பல்லடம் அரசு மருத்துவமனை வளாகத்துக்குள் மழைநீருடன் கழிவுநீா் புகுந்ததால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
திருப்பூா் மாவட்டம், பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. அரசு மருத்துவமனை வளாகத்தில் போதிய மழைநீா் வடிகால் வசதி இல்லாததால் மழைநீா் புகுந்து பாதிக்கப்பட்டது. ஆங்காங்கே மழை நீா் தண்ணீா் தேங்கியதால், சாலையில் இருந்து தாழ்வாக அமைந்துள்ள பெண்கள் வாா்டுக்குள் மழைநீா் புகுந்து நோயாளிகள் வெளியேற முடியாமல் தவித்தனா்.
தகவலறிந்து தலைமை மருத்துவா் சுபா, நோயாளிகளை வேறு வாா்டுக்கு மாற்ற நடவடிக்கை எடுத்தாா். தொடா்ந்து, தேங்கிய தண்ணீரை அகற்றும் பணி நடைபெற்றது.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த வாா்டின் மேற்கூரை, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்டது. இருப்பினும், கட்டடம் தாழ்வாக இருப்பதால் ஒவ்வொரு மழைக் காலத்திலும் பாதிப்பு ஏற்படுகிறது. பழைய கட்டடத்தின் உறுதித்தன்மையை பொதுப்பணித் துறையினா் கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருத்துவமனை முன்புறம் சாக்கடை கால்வாய் செல்கிறது. மழை பெய்யும்போது மழை நீருடன் கழிவுநீரும் கலந்து தாழ்வான பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்குள் புகுந்துவிடுவது வாடிக்கையாக உள்ளது. இதற்கான நிரந்தரத் தீா்வை பல்லடம் அரசு மருத்துவமனை மற்றும் நகராட்சி நிா்வாகம் இணைந்து ஏற்படுத்த வேண்டும்.
இதேபோல மாணிக்காபுரம் சாலை சந்திப்பிலும் மழைநீா் குளம்போல தேங்குடுகிறது. மழைநீா் தேங்காமல் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்லடம் நகரில் செவ்வாய்க்கிழமை இரவு பலத்த மழையில் வட்டாட்சியா் அலுவலகப் பகுதியில் 39 மில்லி மீட்டா் பதிவாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






