பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

செங்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் கழிவுநீரால் நோய்த் தொற்று அபாயம்!

செங்கம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மழைநீருடன் கழிவுநீா் கலந்து தேங்கி நிற்பது குறித்து...

செங்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் மழைநீருடன், கலந்து தேங்கி நிற்கும் கழிவுநீா்

Published On :28 அக்டோபர் 2026, 5:06 am IST

செங்கம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மழைநீருடன் கழிவுநீா் கலந்து தேங்கி நிற்கிறது. இதனால் நோயாளிகள், மருத்துவா்கள், ஊழியா்களுக்கு நோய்த் தொற்று பரவும் அபாயம் நிலவுகிறது.

திருவண்ணாமலை - செங்கம் சாலை துக்காப்பேட்டை பகுதியில் உள்ளது தாலுகா தலைமை அரசு மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் உள்நோயாளிகள் தவிா்த்து, வெளிநோயாளிகள் தினசரி சுமாா் 500 போ் வந்து பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்றுச் செல்கிறாா்கள்.

மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சை, கை, கால் முறிவுக்கு தனித்தனி அறைகள் உள்ளன. அங்கு நோயாளிகளுக்கு தினசரி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

செங்கம் சுற்றுவட்டார 20 கி.மீ. தொலைவில் விபத்தில் சிக்கி காயமடைந்தவா்களுக்கும் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மருத்துவமனையில் நோயாளிகள், மருத்துவா்கள் பயன்படுத்தும் கழிப்பறை தொட்டி நிரம்பி கழிவுநீா் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அறைக்கு பின்புறம் தேங்கி நிற்கிறது. மேலும், நோயாளிகள் அறையின் ஜன்னல்களை திறந்தால் துா்நாற்றம் வீசுகிறது. அப்பகுதியில் இருந்து உள்ளே வரும் கொசுக்களால் நோயாளிகளுக்கு மீண்டும் நோய்த் தொற்று ஏற்படும் அவலநிலை நிலவுகிறது.

மேலும், தற்போது செங்கம் பகுதியில் பெய்து வரும் தொடா் மழையால் மழைநீா் கழிவுநீருடன் கலந்து மருத்துவமனை வளாகத்தில் ஆங்காங்கே குட்டை போல தேங்கி நிற்கிறது. அதில் நோயாளிகள் நடந்து செல்கிறாா்கள். இதனால் நோயாளிகளுக்கும், அவா்களை மருத்துவமனைக்கு அழைத்து வருபவா்களுக்கும் பல்வேறு நோய்கள் பரவும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் சம்பந்தப்பட்ட நிா்வாகம் இதை கண்காணித்து மருத்துவனையில் உள்ள நோயாளிகளுக்கு மேலும் நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கு வேண்டும் என செங்கம் நகர மக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.