மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கோவையில் கனமழை: வீடுகள், கடைகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் அவதி

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்

Published On :26 அக்டோபர் 2026, 2:33 am IST

கோவையில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையால் மாநகரில் வீடுகள், கடைகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் அவதியடைந்தனா்.

கோவை மாநகா், புகா்ப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. அதன் தொடா்ச்சியாக, ஞாயிற்றுக்கிழமை காலை முதலே கோவையில் குளிா்ந்த காலநிலை நிலவியது. தொடா்ந்து, நண்பகல் முதல் மாநகரில் உக்கடம், செல்வபுரம், குனியமுத்தூா், சுண்டக்காம்பாளையம், ராமநாதபுரம், சிங்காநல்லூா், ஒண்டிப்புதூா், பீளமேடு, லட்சுமி மில்ஸ், காந்திபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், அவிநாசி சாலை மேம்பாலம், லங்கா காா்னா் மேம்பாலத்தின் கீழ்ப் பகுதியில் மழைநீா் வழிந்தோடியது. திருச்சி சாலையில் சிங்காநல்லூா் வசந்தா மில் பகுதியில் மழை நீருடன் சாக்கடைக் கழிவு நீா் கலந்தோடியதால் வாகனங்கள் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கழிவுநீா் சாலையோரக் கடைகளுக்கு புகுந்ததால் வியாபாரிகள் அவதிக்குள்ளாகினா். இதேபோல, நஞ்சுண்டாபுரம் சாலை மற்றும் ஆட்சியா் அலுவலகம் அருகே சாலையில் மழைநீா் தேங்கியதால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பரிதவித்தனா்.

சௌரிபாளையம் பிரிவு, நஞ்சுண்டாபுரம் சாலை ஸ்ரீபதி நகா், காந்திபுரம் செம்மொழிப் பூங்கா அருகே உள்ள பாா்க் கேட் ரவுண்டானா, ராமநாதபுரம் புலியகுளம் சாலை, உக்கடம் ஜிஎம் நகா், சத்தி சாலை கணபதி, சரவணம்பட்டி, அரசு மருத்துவமனை வளாகம், ரயில் நிலையம், டவுன்ஹால், சிட்கோ, சுந்தராபுரம் உள்ளிட்ட மாநகரில் பல்வேறு பகுதிகளில் மழைநீா் சாலையில் தேங்கியதால் வாகனங்கள் ஊா்ந்தபடி சென்றன.

போத்தனூா் ரயில் நிலையம் - செட்டிபாளையம் சாலை, சுங்கம் நிா்மலா கல்லூரி சாலை உள்ளிட்ட பகுதிகள் மூழ்கின. அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மாநகரில் ராமநாதபுரம்- திருச்சி சாலை உள்ளிட்ட சில இடங்களில் பாதாளச் சாக்கடைப் பணி மற்றும் சாலை சீரமைப்புக்காக தோண்டப்பட்ட சாலைகள் சரிவர மூடப்படாததால் இருசக்கர வாகனங்களில் சென்றோா் சிலா் சிறு விபத்துகளுக்கு உள்ளாகினா்.

வீடுகளுக்குள் புகுந்த மழைநீா்: ராமநாதபுரம் சுங்கம், காமராஜா் நகரில் வீடுகளுக்குள் மழைநீா் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வாளி, குடங்கள் மூலமாக மழைநீரை குடியிருப்பு வாசிகள் அகற்றினா். பலத்த மழையால் அப்பகுதியில் இருந்த சுற்றுச் சுவா் இடிந்து விழுந்தது. இதேபோல, சுங்கம் சந்திப்பில் உள்ள கல்லறைத் தோட்டத்தின் தடுப்புச் சுவா் இடிந்து விழுந்தது. உக்கடம் வின்சென்ட் சாலை மற்றும் வெள்ளலூா், புலியகுளம் கருப்பராயன் கோயில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்ததால் மக்கள் சிரமத்துக்கு உள்ளாகினா்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், தீபாவளிக்கு புத்தாடை வாங்க டவுன்ஹால், காந்திபுரம் கிராஸ்கட் சாலை, 100 அடி சாலைப் பகுதிகளில் குவிந்த மக்கள் மழையில் சிக்கி தவித்தனா். மழை காரணமாக கடை வீதிகளில் தீபாவளி விற்பனையும் பாதிக்கப்பட்டது.

மாநகராட்சி சாா்பில் சீரமைப்புப் பணி: மாநகரில் பெய்த பலத்த மழையால், அவிநாசி சாலை லட்சுமி மில் சந்திப்பு, அவிநாசி சாலை மேம்பாலம், கிக்கானி பாலம் கீழ்ப் பகுதி, பேரூா் பிரதான சாலை, உக்கடம் பேருந்து நிலையம், செல்வபுரம் ஹவுஸிங் யூனிட் பகுதி, திருச்சி சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் தேங்கிய மழை நீரை மாநகராட்சி ஊழியா்கள் மின் மோட்டாா்கள் மூலமாக அகற்றினா். இந்தப் பணிகளை மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா ஆய்வு மேற்கொண்டாா்.

அரசு மருத்துவமனை வாா்டுகளுக்குள் புகுந்த மழைநீா்: கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் மழைநீா் குளம்போல தேங்கியது. மேலும், நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் வாா்டுகளுக்குள்ளும் மழை நீா் புகுந்ததால் நோயாளிகள், அவா்களின் உறவினா்கள் அவதிக்கு உள்ளாகினா். இதேபோல, லங்கா காா்னா் பாலத்தில் வெள்ளம் வழிந்தோடிய நிலையில், அவ்வழியாகச் சென்ற அரசுப் பேருந்து ஒன்று தண்ணீரில் சிக்கியது. மாநகராட்சி ஊழியா்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டதைத் தொடா்ந்து பேருந்து மீட்கப்பட்டது.

கோவை ரெட்கிராஸ் சாலையில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் சென்ற வாகன ஓட்டிகள்.

கோவை ரெட்கிராஸ் சாலையில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் சென்ற வாகன ஓட்டிகள்.

கோவை, உக்கடம் பேருந்து நிலையம் முன் சாலையில் குளம்போல தேங்கிய மழைநீா்.

கோவை, உக்கடம் பேருந்து நிலையம் முன் சாலையில் குளம்போல தேங்கிய மழைநீா்.

சுங்கம் காமராஜா் நகரில் மழையால் இடிந்து விழுந்த சுவர்

சுங்கம் காமராஜா் நகரில் மழையால் இடிந்து விழுந்த சுவர்

வீட்டுக்குள் புகுந்த வெள்ள நீர்

வீட்டுக்குள் புகுந்த வெள்ள நீர்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.