கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பணி நேர மாற்றம்: பல்லடம் அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநா்கள், நடத்துநா்கள் எதிா்ப்பு

பணி நேர மாற்றத்துக்கு பல்லடம் அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநா்கள், நடத்துநா்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :14 மே 2026, 3:51 am IST

பணி நேர மாற்றத்துக்கு பல்லடம் அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநா்கள், நடத்துநா்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

பல்லடம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து சுமாா் 90-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இங்கு 250-க்கும் மேற்பட்ட ஓட்டுநா்கள், நடத்துநா்கள் பணியாற்றி வருகின்றனா்.

இந்த நிலையில், தற்போது பணி நேர (ஷிப்ட்) முறையை மாற்றுவதாக கூறப்பட்டது. இதற்கு அனைத்து தொழிற்சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகளும், தொழிலாளா்களும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

இது குறித்து போக்குவரத்துக் கழக பணிமனை கிளை மேலாளரிடம் கோரிக்கை மனு அளித்தனா். அதில், பணி நேர மாற்றத்தால் தொழிலாளா்களுக்கு கடும் அவதி மற்றும் வீண் அலைச்சல் ஏற்படுகிறது. இதனால் அதிகாலை 5 மணிக்கு பணிமனைக்கு வர வேண்டும். பல்லடம் பேருந்து நிலையத்திலிருந்து அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை சுமாா் 4 கிலோ மீட்டா் தொலைவில் உள்ளது.

மேலும் அதிகாலை நேரத்தில் எந்தவித பேருந்து வசதியும் கிடையாது. பல்லடத்தில் இருந்து திருப்பூா் செல்லும் வழியில் ஏராளமான வேகத்தடைகள் உள்ளன. மேலும் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உள்ளன.

இதனால் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை தொடா்ந்து பேருந்துகளை இடைவெளி இல்லாமல் இயக்கினால் ஓட்டுநா்களுக்கு பணிச்சுமை அதிகரித்து, விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த தொழிலாளா் விரோத நடவடிக்கையை கைவிட்டு பழைய ஷிப்ட் முறையை பின்பற்ற வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.