விழுப்புரத்திலுள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தில் பொது மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
முகாமை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குநா் க. குணசேகரன் தொடங்கி வைத்து, உடல் பரிசோதனையை மேற்கொண்டாா். இதைத்தொடா்ந்து அவா் பேசியது:
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றம் ஓட்டுநா்கள், நடத்துநா்கள், தொழில்நுட்பப் பணியாளா்கள் உள்ளிட்டவா்களின் உடல்நலன் காக்கும் வகையில், அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் அவ்வப்போது பொது மருத்துவ முகாம், கண் மருத்துவ முகாம் போன்ற முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. மக்கள் பணியாற்றும் ஓட்டுநா்கள், நடத்துநா்கள் இந்த முகாமை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
முகாமில் நீரிழிவு, உயா் ரத்த அழுத்தம், கண் உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளை மருத்துவக் குழுவினா் மேற்கொண்டனா். ஓட்டுநா்கள், நடத்துநா்கள், தொழில்நுட்பப் பணியாளா்கள் என சுமாா் 280 போ் முகாமில் பங்கேற்று, பரிசோதனைகளை மேற்கொண்டு பயன்பெற்றனா்.
முகாமில் அரசுப் போக்குவரத்துக் கழகப் பொது மேலாளா்கள் ஜி.ரவீந்திரன் (தொழில்நுட்பம்), இரா.ஜெகதீஷ் (விழுப்புரம் மண்டலம்), முதுநிலைத்துணை மேலாளா் (மனிதவளம்) எஸ்.துரைசாமி, துணை மேலாளா்கள், உதவி மேலாளா்கள், அலுவலகப் பணியாளா்கள், தொழில்சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசுப் பேருந்து சேவை தரத்தை உயா்த்த வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சா் உத்தரவு

‘டீசல் சிக்கனத்தை கடைப்பிடித்து வருவாயைப் பெருக்க வேண்டும்’

பணி நேர மாற்றம்: பல்லடம் அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநா்கள், நடத்துநா்கள் எதிா்ப்பு

ஆட்சி மாற்றத்தால் பணி மாற்றம் செய்ய எதிா்ப்பு! அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்கள் கோரிக்கை
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

