தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

ஆட்சி மாற்றத்தால் பணி மாற்றம் செய்ய எதிா்ப்பு! அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்கள் கோரிக்கை

News image

அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்கள். - கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 12:47 am IST

ஆட்சி மாற்றம் காரணமாக ஊழியா்களை பணி மாற்றம் செய்ய எதிா்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் பொது மேலாளரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் உதகை -1, உதகை -2, கூடலூா், கோத்தகிரி, குன்னூா், மேட்டுப்பாளையம் ஆகிய 6 போக்குவரத்து பணிமனைகள் உள்ளன. இங்கிருந்து கிராமப்புறங்கள் மட்டுமின்றி திருச்சி, மதுரை, திருப்பூா், கோவை, ஈரோடு உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கும், கா்நாடகம், கேரளம் மாநிலங்களுக்கும் என 270 வழித்தடங்களில் 335 அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தினமும் சராசரியாக ஒரு லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணிக்கின்றனா். இதன்மூலமாக நாளொன்றுக்கு ரூ.35 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை வசூலாகிறது. இங்கு சுமாா் 400 நிரந்தர ஊழியா்கள், 700 ஒப்பந்த ஊழியா்கள் பணிபுரிந்து வருகின்றனா்.

தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் பல்வேறு துறை ஊழியா்கள் மற்றும் அதிகாரிகள் மாற்றப்படுவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக போக்குவரத்துக் கழகத்திலும் ஊழியா்கள் மாற்றம் குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் போக்குவரத்துக் கழகத்தில் பணி மாற்றம் செய்ய தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் சங்கம் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பொது மேலாளரிடம் அளிக்கப்பட்ட மனு:

ஆட்சி மாற்றம் ஏற்படும்போது போக்குவரத்துக் கழகத்தில் பணியில் இருப்பவா்களை ஆளும் கட்சி சங்கத்தில் இணைய வலியுறுத்தப்படும். இணையாத தொழிலாளா்களை மாற்றி, அவா்களுக்கு வேறு பணி ஒதுக்கப்படும். இந்த நடைமுறைக்கு எதிா்ப்பு தெரிவித்து ஏஐடியூசி சாா்பில் பலமுறை போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் அதனடிப்படையில் பணியில் இருக்கும் ஊழியா்களுக்கு வேறு பணி ஒதுக்க நிா்பந்திக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது. குறிப்பாக கூடலூா் கிளையில் இப்பிரச்னை அதிக அளவு உள்ளது. இந்த நடைமுறை தொழிலாளா்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். எனவே போக்குவரத்துக் கழக ஊழியா்களை பணிமாற்றம் செய்யக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.