தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க ஆட்சி மாற்றம் தேவை என்றாா் பாஜக தேசிய பொதுச் செயலரும் நடிகருமான சரத்குமாா்.
விளவங்கோடு தொகுதி பாஜக வேட்பாளா் எஸ். விஜயதரணியை ஆதரித்து மாா்த்தாண்டத்தில் அவா் சனிக்கிழமை பேசியதாவது:
தமிழகத்தில் ஊழல் அதிகரித்துள்ளது. பள்ளிச் சிறுவா்கள் கையிலும் கஞ்சா புழங்குகிறது. மாநிலத்தில் எந்த வளா்ச்சியும் இல்லை. 16 வந்தே பாரத் ரயில்களை மத்திய அரசு தந்துள்ளது. ஜல் ஜீவன் திட்டம் மூலம் நேரடியாக வீடுகளுக்கு குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.
5 ஆண்டுகளில் மத்திய அரசு ரூ. 16 லட்சம் கோடி நிதியை தமிழகத்துக்கு தந்துள்ளது. ஆனாலும், இந்த அரசு ரூ. 5 லட்சம் கோடி வரை கடன் வாங்கியுள்ளது. பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுக்க மத்திய அரசு எடுத்த முயற்சியை திமுகவும், காங்கிரஸும் தடுத்துவிட்டன. இச் சட்டம் வருங்காலத்தில் நிச்சயமாக நிறைவேறும். மகளிா் உரிமை காக்கப்படும்.
ஊழலை ஒழிக்கவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் ஆட்சி மாற்றம் வேண்டும். தமிழக முதல்வராக எடப்பாடி கே.பழனிசாமி மீண்டும் வர வேண்டும்.
குற்றப்பின்னணி கொண்டவரை காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தியுள்ள நிலையில், இந்தத் தொகுதியில் 3 முறை எம்எல்ஏவாக இருந்து மக்களுக்காக உழைத்த எஸ். விஜயதரணி மீண்டும் பணியாற்ற அவருக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.
பிரசாரத்தில், குமரி மேற்கு மாவட்ட பாஜக தலைவா் ஆா்.டி. சுரேஷ், அதிமுக குமரி மேற்கு மாவட்டச் செயலா் ஜெயசுதா்ஷன், பாமக மாநில துணைத் தலைவா் ஹரிஹரன், பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் ஜெயசீலன், மாவட்ட துணைத் தலைவா் ரெத்தினமணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆட்சி மாற்றம் ஏற்பட அதிமுகவை ஆதரியுங்கள்: அரக்கோணம் வேட்பாளா் சு.ரவி

தமிழகம் அமைதியாக இருக்க ஆட்சி மாற்றம் அவசியம்: நயினாா் நாகேந்திரன்

பொன். பாலகணபதியை ஆதரித்து திருப்புவனத்தில் அண்ணாமலை பிரசாரம்

கேரளத்தில் பாஜக ஆட்சியமைக்க கிறிஸ்தவா்கள் ஆதரவளிக்க வேண்டும்: அமித் ஷா பிரசாரம்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

