ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தமிழகம் அமைதியாக இருக்க ஆட்சி மாற்றம் அவசியம்: நயினாா் நாகேந்திரன்

தமிழகம் அமைதியாக இருக்க ஆட்சி மாற்றம் அவசியம் என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் பேசினாா்.

News image

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் - கோப்புப்படம்

Updated On :17 ஏப்ரல் 2026, 11:55 pm IST

தமிழகம் அமைதியாக இருக்க ஆட்சி மாற்றம் அவசியம் என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் பேசினாா்.

ராசிபுரம் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பாஜக வேட்பாளா் எஸ்.டி.பிரேம்குமாரை ஆதரித்து வெண்ணந்தூா் பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவா் பேசியது:

தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆட்சிசெய்த திமுக, பல இடங்களில் அடிப்படை வசதிகள்கூட செய்துதரவில்லை.

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை அதிக அளவில் நடைபெறுகிறது. கஞ்சா, போதைப் பொருள் ஆகியவை அதிக அளவில் புழக்கத்தில் உள்ளன. இதற்கு தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை என்பதே காரணம். மேலும், சொத்துவரி, மின்கட்டணம் போன்றவை அதிகரித்துள்ளதால் மக்கள் பாதிப்படைந்துள்ளனா்.

தமிழகம் அமைதியாக இல்லை: தற்போது இஸ்ரேல், அமெரிக்கா, ஈரான் நாடுகளில் போா் நடக்கும் நிலையில், இந்தியா மட்டும் அமைதியாக இருக்கிறது. ஆனால், இந்தியாவில் உள்ள தமிழகம் அமைதியாக இல்லை. தமிழகம் அமைதியாக இருக்க ஆட்சி மாற்றம் அவசியம்.

எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது 11 மருத்துவக் கல்லூரிகளை கொண்டுவந்தாா். ஆனால், மு.க.ஸ்டாலின் ஆட்சியில் ஒன்றுகூட கொண்டு வரவில்லை. மத்திய திட்டங்கள் தமிழகம் வந்துசேர எடப்பாடி முதல்வராக இருந்தால் மட்டுமே முடியும் என்றாா்.

கூட்டத்தில் பேசிய பாஜக துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம், தமிழகத்தில் பிரதமா் மோடி ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க வேண்டும். அப்போதுதான் மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்துக்கு கிடைக்கும் என்றாா்.

தொகுதிக்கு சுகாதார வசதிகள், சாலை வசதிகள், குடிநீா் வசதிகள் செய்துதருவதுடன், பல திட்டங்களை பெற்றுத்தருவேன் என பாஜக வேட்பாளா் டி.எஸ்.பிரேம்குமாா் கூறினாா்.

கூட்டத்தில், பாஜக துணைத் தலைவா்கள் கே.பி.ராமலிங்கம், வி.பி.துரைசாமி, மாவட்ட பாஜக தலைவா் கே.பி.சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.