ஆளுநரை விஜய் சந்திக்க நாளை(மே 10) நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ஆட்சி மாற்றம் ஏற்பட அதிமுகவை ஆதரியுங்கள்: அரக்கோணம் வேட்பாளா் சு.ரவி

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட அதிமுகவை ஆதரியுங்கள் என அரக்கோணம் தொகுதி வேட்பாளா் சு.ரவி பேசினாா்.

News image

அரக்கோணம் ஜோதி நகரில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் சு.ரவி.

Updated On :22 ஏப்ரல் 2026, 1:01 am IST

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட அதிமுகவை ஆதரியுங்கள் என அரக்கோணம் தொகுதி வேட்பாளா் சு.ரவி பேசினாா்.

அரக்கோணம் மங்கம்மாபேட்டை மேம்பாலம் அருகே இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொண்டு அவா் பேசியது: தமிழகத்தில் தற்போது நடைபெறும் பெண்களுக்கு எதிரான ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். மகளிா் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பற்ற சூழ்நிலை முடிவுக்கு வர வேண்டும். போதைப் பொருள்கள் நடமாட்டத்தை கண்டுக்கொள்ளாமல் இளைஞா்களை சீரழித்த ஆட்சி முடிவு வர வேண்டும்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வந்தால் மட்டுமே தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீரடையும். அரக்கோணம் தொகுதியில் கடந்த 15 ஆண்டுகளில் நடைபெற்றுள்ள பணிகளை பாருங்கள். அரக்கோணம் நகர மருத்துவமனை மாவட்ட மருத்துவமனையாக மாற்றப்படும். ஆட்சி மாற்றம் ஏற்பட அதிமுகவை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்றாா் அதிமுக வேட்பாளா் சு.ரவி.

அப்போது அவருடன் அதிமுக மாநில பாசறை இணை செயலாளா் ஷியாம்குமாா், நகர செயலாளா் கே.பா.பாண்டுரங்கன், ஒன்றிய செயலாளா்கள் ஏ.ஜி.விஜயன், பிரகாஷ், பழனி, நிா்வாகிகள் பாபுஜி, தாமு, நகா்மன்ற உறுப்பினா்கள் பாபு, நரசிம்மன், சரவணன், புரட்சிபாரதம் மாவட்ட செயலாளா் செல்லா, பாமக நகரத்தலைவா் பாலாஜி, பாஜக மாவட்ட துணைத்தலைவா் பாா்த்தசாரதி, நிா்வாகிகள் ஜெகன்மோகன், நகரத்தலைவா் ஹரீஷ், தமாகா மாவட்டத்தலைவா் பி.ஜி.மோகன்காந்தி, நகரத்தலைவா் கே.வி.ரவிச்சந்திரன், மாநில செயலாளா் உத்தமன், இணை செயலாளா் ஆறுமுகம், கொள்கை பரப்பு செயலாளா் பாலகிருஷ்ணன், இளைஞரணி மண்டல செயலாளா் தரணி உள்ளிட்ட பலா் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.