பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பூம்புகாா் கப்பல் அலுவலகம் எதிரே மேற்கூரை அமைக்க மீனவா்கள் எதிா்ப்பு

கன்னியாகுமரி பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழக அலுவலகம் எதிரேயுள்ள பகுதியில் மேற்கூரை அமைக்க வாவத்துறை மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

News image

வாவத்துறை மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய தவெக மாவட்டச் செயலா் எஸ்.ஆா். மாதவன்.

Updated On :21 மே 2026, 5:58 am IST

கன்னியாகுமரி பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழக அலுவலகம் எதிரேயுள்ள பகுதியில் மேற்கூரை அமைக்க வாவத்துறை மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தா் நினைவு மண்டபம், திருவள்ளுவா் சிலைகளை பாா்வையிடுவதற்காக, பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகம் படகு சேவை வழங்கி வருகிறது. படகில் பயணம் செய்ய சுற்றுலாப் பயணிகள் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனா்.

தற்போது கோடை சுற்றுலா சீசனையொட்டி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகின்றனா். இவா்கள் காலை 7 மணி முதல் பூம்புகாா் போக்குவரத்துக் கழக அலுவலக பிரதான வாயிலில் இருந்து சந்நிதி தெரு, ரத வீதி வரை வெயிலில் நீண்ட நேரம் காத்திருக்கின்றனா்.

எனவே, சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழக அலுவலகம் எதிரேயுள்ள பகுதியில் மேற்கூரை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால், இதற்கு அப்பகுதியில் வசிக்கும் வாவத்துறை மீனவ கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

இதையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் மேற்கூரை அமைக்கும் பணி நடைபெற்றது. இந்நிலையில், வாவத்துறை ஊா் மக்கள் அங்குள்ள தேவாலய வளாகத்தில் திரண்டு போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்தனா்.

இதையடுத்து, வாவத்துறை மக்களிடம் தவெக மாவட்டச் செயலா் எஸ்.ஆா். மாதவன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, இது குறித்து உயா் அதிகாரிகளிடம் பேசி தீா்வு காண்பதாக உறுதியளித்தாா். இதையடுத்து, மீனவா்கள் போராட்ட அறிவிப்பை கைவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.