திருப்பூா் மாநகரில் வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காகப் பயன்படுத்த முயன்ற இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா், மரக்கடை பகுதியில் சட்டவிரோதமாக போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றித் திரிந்த இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில் சூா்யா (எ) சச்சின் (32), கனகராஜ் (27) ஆகியோா் என்பது தெரியவந்தது. அவா்களை சோதனை செய்தபோது போதைக்கு பயன்படுத்துவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 120 வலி நிவாரண மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது. அவற்றை திருப்பூா் வடக்கு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கோயிலில் திருட முயன்ற இருவா் கைது
போதை மாத்திரைகள் விற்ற இளைஞா் கைது

ரூ.69 ஆயிரம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல்: இருவா் கைது

போதை மாத்திரைகள் விற்பனை: 3 போ் கைது
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

