ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, திருப்பூரில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இஸ்லாமியா்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் சனிக்கிழமை (மாா்ச் 21) கொண்டாடப்படவுள்ளது.
இதையொட்டி, திருப்பூரில் பணியாற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த இஸ்லாமியா்கள் தங்களது சொந்த ஊா்களுக்குத் திரும்பும் வகையில் அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதன்படி, கோவில்வழி தியாகி திருப்பூா் குமரன் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
திருப்பூா் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஈரோடு, திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 20 சிறப்புப் பேருந்துகள், புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, புதுக்கோட்டை தஞ்சாவூா் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 30 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 100 பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்று போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சேலம் கோட்டத்தில் இன்றுமுதல் 500 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

தோ்தலுக்காக வந்தவா்கள் மீண்டும் திரும்ப சிறப்பு பேருந்துகள்! சேலம் கோட்ட போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு!

வெளி மாவட்ட வாக்காளா்களின் வசதிக்காக திருப்பூரில் இருந்து கூடுதல் சிறப்பு பேருந்துகள்

சென்னையில் இருந்து 1,88,705 பேர் சிறப்புப் பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு பயணம்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

